tamilnadu

img

நிரம்பி வருகிறது வைகை அணை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

நிரம்பி வருகிறது வைகை அணை  இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

தேனி, ஆக.4- வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள  அபாய எச்சரிக்கை அறிவிக்கப் பட்டுள்ளது.  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசனநீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. தற்போது கேரள, தமிழக எல்லையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இத னால் மூலவைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் விநாடிக்கு 1,867கனஅடிநீர் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடர்ந்து  திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்தபடி இருந்தது. இந்நிலையில் ஜூலை 20 ஆம் தேதி 63.77அடியாக இருந்த நீர்மட்டம் (மொத்த உயரம் 71) படிப்படியாக அதிகரித்து 26 ஆம் தேதி 66 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு  வெளியிடப்பட்டது. தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிர தான கால்வாய் பாசனப் பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல்போகம் மற்றும் குடிநீர் திட்டங் களுக்காக விநாடிக்கு 769 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் நீர்வரத்தினால் அணையின் நீர்மட்டம் திங்களன்று 68.50அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறி விக்கப்பட்டுள்ளது. 69 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்ததும் மூன்றாம் கட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படும். இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது விநாடிக்கு  1,594 கனஅடிநீர் வந்து கொண்டி ருக்கிறது. இதனால் விரைவில் 69அடியை எட்டிவிடும். இருப்பினும் நீர்வரத்துக்கு ஏற்ப நீர்மட்டத்தை 69அல்லது 71அடியில் நிலை நிறுத்தப்படும்.