IOB -இல் காலிப் பணியிடங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 127 சிறப்புப் பணி அலுவலர்களின் (Specialist Officers) காலிப்பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சிறப்புப் பணி அலுவலர்கள்(முதுநிலை மேலாளர்கள் மற்றும் மேலாளர்கள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வங்கி வெளியிட்டிருக்கிறது. கல்வித்தகுதி : கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் போன்ற ஏதாவது ஒரு பொறியியல் துறையில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது MBA /IT/ Cyber Security/ Artificial Intelligence/ Data Science.போன்ற பிரிவுகளில் ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்அல்லது நிதி நிறுவனங்களில் ஒன்று முதல் மூன்று வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். வயது வரம்பு : செப்டம்பர் 1, 2025 தேதியின்படி முதுநிலை மேலாளர் பணிக்கு 30 முதல் 40 வயதுக்குள்ளும் மேலாளர் பணிக்கு 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC/PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி அதிகபட்ச வயது வரம்பு சலுகை தரப்படும். தேர்வு முறை: கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வில் காரணம் அறிதல்(Reasoning). ஆங்கில மொழியறிவு (English language), கல்வித்தகுதிக்கான பாடங்களில் இருந்து வினாக்கள் என்று இருக்கும். விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினர்களுக்கு ரூபாய் 175. பொது /EWS/OBC பிரிவினர்களுக்கு ரூபாய் 1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை:www.iob.inஎன்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான விரிவான பாடத்திட்டம், உடற்தகுதி, உடற்திறன் தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள www.iob.inஎன்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி அக்டோபர் 03, 2025 ஆகும்.
SBI வங்கியில் மேலாளர் பணி
எஸ்பிஐ வங்கியில் சிறப்பு நிலை அலுவலர்கள்(Specialist Officers) பணிகளில் 122 காலி யிடங்கள் வெளியாகியுள்ளன. மேலா ளர்களாக நியமிக்கப்படவிருக்கும் இந்தப் பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிக்கை வெளியாகி யுள்ளது. இப்பணிக்கு MBA/CA/CFA அல்லது B.E/B.TECH ஏதாவது ஒரு பிரிவுகள் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து முழு விபரங்களை அறிய www.sbi.co.inஎன்ற இணையதளத்தை பார்வையிடவும். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி அக்டோபர் 2, 2025 ஆகும்.
விளையாட்டுவீரரா?
தெற்கு ரயில்வேயில் விளை யாட்டு வீரர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். மொத்தம் 63 பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிக்கை வந்திருக் கிறது. 18 முதல் 25 வயதுக்குள் உள்ளவர்கள் இதற்கு விண்ணப் பிக்கலாம். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எந்தெந்த பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. அதற் கான தகுதிகள் உள்ளிட்ட விப ரங்கள் www.rrcmas.in என்ற இணையதளத்தில் தரப் பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கு அக்டோபர் 10, 2025 கடைசித்தேதி ஆகும்.
பவர்கிரிட் கார்ப்பரேஷனில் காலிப் பணியிடங்கள் 1161 பெங்களூரில் உள்ள
பவர் கிரிட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள 1161 தொழில் பழகு நர் (Apprentice) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ/ டிப்ளமோ /பட்டதாரிகள் விண்ணப் பிக்கலாம். இதற்கான அறிவிப்பு வெளி யாகி உள்ளது. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ ஐடிஐ/ டிப்ளமோ ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சமாக 32 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் பெயர்: Trade appren tice, Diploma apprentice, Graduate apprentice தேர்வு முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படு வர். தகுதியானவர்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுவர். பின்பு சான்றிதழ் பரிசோதனைக்குப் பிறகு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: இல்லை. கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் தரப்பட்டுள்ளன. முழுமையான அறி விக்கையைப் பெற www.nats.education.gov.in & www.apprentice shipindia.gov.in என்ற இணைய தளங்களைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்கக் கடைசித்தேதி அக்டோபர் 6, 2025 ஆகும்.