states

img

உ.பி: எரிவாயு சிலிண்டர் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 75 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக நாடு முழுவதும் எல்.பி.ஜி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொதுமக்கள் சிலிண்டரை பெறுவதற்கு நீண்ட வரிகையில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் ஃபரூக்காபாத் மாவட்டத்தில், கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த 75 வயது முக்தார் அன்சாரி என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் காலை 6.30 மணியில் இருந்து பல மணி நேரம் சிலிண்டர் பெறுவதற்காக காத்திருந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் 66 வயதான பூஷன் குமார் என்பவர் எரிவாயு சிலிண்டரைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.