அமெரிக்க வரி விதிப்பால் லட்சக்கணக்கானோரின் வேலைக்கு ஆபத்து
தமிழகத்தின் ஜவுளித்தொழிலை பாதுகாக்க ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்!
கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் கரூர், ஆக. 25 - அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பால், தமிழக ஜவுளித் தொழில்துறை பெரும் நெருக்கடியும், வேலையிழப்பு அபாயத்தையும் எதிர்கொண்டுள்ள நிலையில், பிரதமர் மோடியும், ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தி யுள்ளார். கரூரில் நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில் இதுதொடர்பாக கே. பாலகிருஷ்ணன் மேலும் கூறியதாவது: “இந்திய பொருட்களுக்கு, அமெரிக்கா வில் 50 சதவிகித வரி விதிக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் ஏற்றுமதியையும், தொழில் களையும் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கும். தமிழகத்தில் குறிப்பாக, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மேற்கு மாவட்டத்தில் உள்ள ஜவுளித் தொழில் மிகப் பெரிய அளவுக்கு பாதிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஜவுளித் துறையில் 75 லட்சம் தொழி லாளர்கள் வேலை செய்கின்றனர். ஏற்று மதி பாதிக்கப்படும் பட்சத்தில் பல தொழிற் சாலைகள் மூடவேண்டியது இருக்கும். ஏற்கெனவே அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்டர்களுக்கு, இந்த மாதம் அனுப்பா தீர்கள், இரண்டு மாதங்கள் கழித்து அனுப்புங்கள் என்று நிறுத்தி வைக்கிறார் கள். இது புதிய ஜவுளி ஆர்டர்கள் இல்லை. பழைய ஆர்டர்களும் நிறுத்திவைப்பு என்ற நிலையில், தொழில் முனைவோர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழக்கு அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய பருத்திக்கு 11 சதவிகிதம் வரியை ஒன்றிய அரசு தற்போது ரத்து செய்துள்ளது. இதனால், மற்றொரு ஆபத்து எழுந்துள்ளது. ஏனெனில், இந்த வரிக்குறைப்பு மூலம் பருத்தி இறக்குமதி அதிகரித்து, உள்நாட்டில் இருக்கும் பருத்திக்கு விலை இருக்காது. ஏற்கெனவே, விவசாயிகள் அமைப்புகள் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள வரி விதிப்பால் தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்படவுள்ள சூழ்நிலையைக் குறிப்பிட்டு, நமது முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு நீண்ட கடிதம் எழுதி உள்ளார். எனவே, பிரதமர் மோடி, உடனடியாக தமிழ்நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு தொழில் முனைவோர்களை அழைத்து ஆலோசித்து, அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், இந்த பாதிப்பு நீடிக்கு மானால், பெரியளவில் வேலை இழப்பு ஏற்படும். வேலையில் இருந்த குடும்பங்கள் வேலை இழந்து வறுமைக்கு சென்று பரிதவிக்கும். இதனை ஒரு சாதாரண விஷய மாக மோடி அரசு பார்க்கக் கூடாது. உடனடி யாக தமிழக அரசுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செப்டம்பர் 3, 4 தேதிகளில் ஜிஎஸ்டி கவுன்சில் அவசரமாக கூடுகிறது. ஜிஎஸ்டி யை ஐந்து முனை வரி விதிப்பில் இருந்து இரண்டு முனை ஜிஎஸ்டி-யாக மாற்ற போகி றார்கள். இவ்வளவு வரி விதிப்பு அறிவிப்பு வேண்டாம் என்று சிபிஎம் ஏற்கெனவே கூறியது. ஆனால் அப்போதெல்லாம் மோடி கேட்காமல் அமெரிக்க அரசு வரியை உயர்த்தியவுடன், ஒன்றிய பாஜக அரசு தற்போது ஜிஎஸ்டி-யை குறைக்கிறேன் என்கிறது. இது நல்லது; வரவேற்கத்தக்கது தான். ஆனால் மாநில அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும். தமிழ்நாடு அரசுக்கு மட்டும் சுமார் 15 ஆயிரம் கோடியும், கேரள அரசுக்கு சுமார் ரூபாய் 9 ஆயிரம் கோடியும் இழப்பு ஏற்படும் என்று கூறுகின்றனர். இதுபோன்ற இழப்புகளை எல்லாம் ஒன்றிய அரசாங்கம் கவனம் செலுத்தாமல் வேறு ஏததோ செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி இதுபோன்ற பிரச்சனை களில் கவனம் செலுத்தாமல், மாநில முத லமைச்சர், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் பிரதமர் உட்பட 30 நாட்கள் சிறையில் இருந்தாலே 31-ஆவது நாள் அவரது பதவி பறிபோய்விடும் என்று பதவிகளை பறிக்கும் வேலையில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது. இது தான் இந்த நாட்டிற்கு மிகப்பெரிய அவசரமா? இந்த சட்டத்திற்கு என்ன தேவை உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய பல மாநில முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்காகத்தான் இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள். இது ஜனநாயக விரோதமானது. திமுக அரசு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறது. அதை வரவேற்கிறோம். அதே சமயத்தில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் போராடுகிறார்கள். யாரெல் லாம் இந்த திமுக ஆட்சி அமைய வேண்டும் என ஆதரவு அளித்தார்களோ அவர்கள் போராடுகிறார்கள். ஆனால், அவர்களது பிரச்சனையை தீர்ப்பதில் அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. இந்த அணுகு முறையை மாற்றிக் கொண்டு, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். போராடக்கூடிய தொழிலாளர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோரின் கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வை முதல்வர் எடுக்க வேண்டும். தமிழகத்தில் சாதிய அணி சேர்க்கை நடப்பது தமிழ்ச் சமுதாயத்திற்கு பெரும் தலைக்குனிவு. சிங்காரவேலர், தந்தை பெரியார் ஆகியோர் சாதி ஒழிப்புக்காக போராடினர். தமிழகத்தில் சாதி அமைப்பு கள், சாதி ஆணவக்கொலைகள் அதி கரித்துள்ளன. காதலர்களை கொலை செய்கிறார்கள். அனைத்துக்கும் காரண மாக இருப்பது சாதியம் தான். தவெக தலைவர் விஜய் அண்மையில் மாநாடு நடத்தினார். அதில், தேச முக்கி யத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சனை யையும் விஜய் பேசவில்லை. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது பற்றியோ, முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா பற்றியோ அவர் பேசவில்லை. வெறும் சவடால் பேச்சி னால் மட்டுமே ஆட்சிக்கு வந்துவிடலாம் என்பது தவறு. பாஜகவை வீழ்த்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் இருக்கிறோம். பாஜக என்கிற பாசிச குணம் கொண்ட கட்சி, இனி ஆட்சியில் நீட்டிப்பது பெரிய ஆபத்து என்பதாலேயே எல்லோரும் இணைந்து எதிர்க்கிறோம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.