tamilnadu

img

மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

தருமபுரி, செப்.2- குண்டல்பட்டி, காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் ஆமை வேகத்தில் நடந்து வரும் மேம்பாலப் பணிகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரு கின்றனர். எனவே, பணியை விரைந்து முடிக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 44 செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை சேலத் திலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு வழியாக செல்கிறது. தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பய ணித்து வருகின்றன. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பாளையம் புதூர், குண்டல்பட்டி உள்ளிட்ட பகுதியிலும் காரிமங்கலம் பகுதி யிலுள்ள கெரகோட அள்ளி, அகரம் பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பா லங்கள் இல்லாததால் அவ்வப் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரி ழப்பு சம்பவங்களும் நடந்து வருகி றது. மேற்கண்ட இடங்களில் மேம் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த னர். இக்கோரிக்கையை நிறை வேற்றாததால் பாளையம் புதூர் சந்திப்பு சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டங்களையும் நடத் தினர். இதையடுத்து பாளையம் புதூர், குண்டலபட்டி, கெரகோட அள்ளி, அகரம் பிரிவு சாலை உள் ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்க உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, குண் டல்பட்டி அகரம் பிரிவு சாலை மற் றும் கெரகோட அள்ளி ஆகிய பகுதி களில் மேம்பாலம் அமைக்கும் பணி  கடந்த வருடம் தொடங்கப்பட்டது. இப்பணி தொடங்கும் முன்பு வாக னங்கள் செல்ல வசதியாக அணுகு  சாலை அமைக்கும் பணி நடந்தது. ஆரம்ப நிலையில் சுறுசுறுப்பாக இருந்த பணி ஒரு கட்டத்தில் முழு மையாக நிறுத்தப்பட்டது. அணுகு சாலை பணிக்காக தோண்டப்பட்ட சாலையோர பள்ளங்களில் எவ்வித எச்சரிக்கை குறியீடுகளும் செய்யப் படவில்லை. குறிப்பாக, ஒளிரும் பட்டைகள் (ரிப்ளைடிங் ஸ்டிக்கர்) பொருத்தப்படாததால் இரவு நேரங் களில் இருசக்கர வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் செல் வோர் விபத்தில் சிக்கி வருகின்ற னர். இவ்வாறு முன்பு தோண்டப் பட்ட பள்ளத்தில் டேங்கர் லாரி விபத் தில் சிக்கிய நிலையில், தேசிய நெடுஞ் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, நிறுத்தப்பட்ட மேம் பாலம் அமைக்கும் பணி, பல மாதங் கள் கழித்து தற்போது ஆமை வேகத் தில் நடந்து வருகிறது. கடந்த வாரத் திலிருந்து மழை பெய்து வருவ தால், அணுகுசாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சிய ளிக்கிறது. இரவு நேரங்களில் இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டி கள் மழைநீர் தேங்கியுள்ள பகுதி யில் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, மேம்பாலப் பணிகளை விரைந்து முடிப்பதுடன், அணுகு சாலைக்காக தோண்டப்பட்ட பள் ளங்கள் உள்ள இடங்களில் எச்ச ரிக்கை விளக்குகள் மற்றும் அறி விப்பு பலகை அமைக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.