tamilnadu

img

பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

பெண் தொழிலாளர்களுக்கு  ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

பெரம்பலூர், ஜூலை 14-  அனைத்து வகையான கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட ஆண்டு பேரவை துறைமங்கலத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம் சங்கத்தின் வேலை அறிக்கையையும், பொருளாளர் அரவிந்த்குமார் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளையும் வாசித்தனர். கூட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் ரெங்கராதன், செயலாளர் அகஸ்டின், பொருளாளர் ரெங்கராஜ் ஆகியோர், சங்கத்தை வாழ்த்திப் பேசினர்.  கட்டுமான தொழிலாளர் நலநிதியில் இருந்து பாதுகாப்பு மூலம் இ.எஸ்.ஐ. திட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களை சேர்த்திட வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். நல வாரியங்களை சீர்குலைக்கக் கூடாது. பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.