tamilnadu

img

ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

ஊர்ப்புற நூலகர்களுக்கு  பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, அக்.10- காலமுறை ஊதியத்தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என பொது நூலகத் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தருமபுரியில் அரசு ஊழியர் சங்க  அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் டி.சண்முகம் தலைமை வகித்தார். மாநிலச் செயலா ளர் சு.குணசேகரன், பொருளாளர் கு.ராஜகுரு, முன்னாள் மாநிலத் தலைவர் பிரபாகரன், முன்னாள் பொதுச்செயலாளர் சரவணன், மாவட்டத் தலைவர் எம்.முனிராஜ், செயலாளர் சர வணன், பொருளாளர் ஜாகீர் உசேன் உட்பட மாநில நிர்வாகி கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், காலியாக உள்ள நூல கர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலமுறை ஊதியத் தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண் டும். நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும். நேரடி யாக 3 ஆம் நிலை நூலகர்களை பணி நியமனம் செய்ய  வேண்டும். மேலும், அனைத்து வகையான நூலகங்களுக்கும் நல்ல காற்றோட்டமான இடவசதி, கழிப்பறை வசதியுடன் புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும். பொதுநூலகத் துறையில் இளையோர், மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி நூலகம், அறிவுசார் மையம் ஆகியவற்றை பொதுநூலகத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். வட்டார மற்றும் முழுநேர நூலகங்களுக்கு உரிய பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.