tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்க வலியுறுத்தல்

அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்க வலியுறுத்தல்

சேலம், ஆக.17- அங்கன்வாடி ஊழியர், உதவியா ளர்களை அரசு ஊழியராக்க வேண்டும்  என, சங்கத்தின் சேலம் மாவட்ட மாநாடு  வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க சேலம் மாவட்ட 7 ஆவது மாநாடு, சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் சனி யன்று சங்கத்தின் தலைவர் எஸ்.வசந்த குமாரி தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.ரத்தினமாலா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் மனோன்மணி, பொருளாளர் மேரி ஆகியோர் அறிக் கைகளை முன்வைத்தனர். மாநில  துணைத்தலைவர் எம்.சரோஜா, சிஐ டியு மாவட்டச் செயலாளர் எ.கோவிந் தன், மாவட்ட துணைத்தலைவர் பி.பன் னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இம்மாநாட்டில், அங்கன்வாடி ஊழி யர்களுக்கு குடும்ப வரன்முறையுடன் கூடிய பென்சன் வழங்க வேண்டும். கோடை விடுமுறையை ஒரு மாத கால மாக உயர்த்த வேண்டும். புதிய செல் போன் மற்றும் இணைய சேவைக்கான கட்டணம் வழங்க வேண்டும். காத்திருப் போர் பட்டியலிலுள்ள அங்கன்வாடி பணியாளர்களை மெயின் பணியாளர்க ளாக பதவி மாற்றம் செய்ய வேண்டும். 10 வருடம் பணி முடித்த உதவியாளர் களை, அங்கன்வாடி பணியாளர்களாக தரம் உயர்த்த வேண்டும். அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு  ஊழியர்களாக்க வேண்டும். அனைத்து  மையங்களுக்கும் குடிநீர் கழிவறை, மின் இணைப்புடன் கூடிய சொந்த கட்டட வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்,  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆர்.மனோன் மணி, செயலாளராக எஸ்.வசந்த குமாரி, பொருளாளராக ப.சாவித் திரி, மாநிலக்குழு உறுப்பினராக சடை யம்மாள், 7 பேர் துணைத்தலைவர்களா கவும், 6 பேர் துணைச்செயலாளர்களா கவும் தேர்வு செய்யப்பட்டனர். சிஐ டியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே. தியாகராஜன் நிறைவுரையாற்றினார்.