கடலூரில் வேரோடு சாய்ந்த மரங்கள்
கடலூர், அக்.22- கடலூரில் செவ்வாய் நள்ளிரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக 17.9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 2,366 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கடற்கரை சாலையில் சாய்ந்த மரத்தை மாநக ராட்சி ஊழியர்கள் அகற்றினர். மஞ்சக்குப்பம் டெலிபோன் நகரில் மரம் மின்சாரக் கம்பிகள் மீது சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாந கராட்சி மற்றும் மின்சார ஊழியர்கள் மரங்களை அப்புறப்படுத்தினர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் த.மோகன், மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவ லர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.