tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

அஇவிதொச கிளை அமைப்பு கூட்டம்

நாகர்கோவில். மார்ச். 19- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கிள்ளியூர் வட்டாரம் பாலூர் ஊராட்சி தாளையன்கோட்டை கிராமத்தில் மார்ச் 18 அன்று கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட நிர்வாகி கிறிசாந்து மேரி, மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி பேசினர்.  இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித் சட்டத்தை மாற்றி ராம்ஜி திட்டம் ஏற்படுத்தி தொழிலாளர்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மது பாட்டில் விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு

குழித்துறை, மார்ச் 19 மது பாட்டில் விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு  66 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப் பட்டன. மார்த்தாண்டம் காவல்  ஆய்வாளர் ஸ்டீபன் தலைமை யில் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். மார்த்தாண் டம் மார்க்கெட் ரோடு அருகே வரும்போது சந்தேகத்தின் பேரில் நின்றவரிடம் சோதனை செய்தபோது 42 மது பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  விசாரித்ததில் இதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் தூண்டுதலின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் அடிய நுத்து பகுதியைச் சேர்ந்த லால் பகதூர் சிங் மகன் கென் பகதூர் சிங்  மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப் பட்டது இவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். 42 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 500 பறிமுதல் செய்யப்பட்டது. ரமேஷை தேடி வருகின்றனர். திக்குறிச்சியைச் சேர்ந்த நாகேந்திரன் 69 இவர் தனது பெட்டிக்கடையில் மது விற்பனை செய்வதாக போலீ சாருக்கு தகவல் வந்தது. திடீர் சோதனை செய்ததில் 26 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறி முதல் செய்யப்பட்டது. இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்ட மாணவர் சங்க பயிற்சி முகாம்

நாகர்கோவில். மார்ச் .19- இந்திய மாணவர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட பயிற்சி முகாம் கேரள மாநிலம் இ.எம்.எஸ் அகாடமியில்  நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஜனனி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஆர்.அனு வரவேற்புரை யாற்றினார். இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் அ.பாக்கியம், இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள்  மாநில தலைவர்கள் என்.ரெஜீஸ்குமார், கே.தங்கமோக னன், ஊடகவியலாளர் ஏ.நீலாம்பரன், ஆய்வாளர் ஜி.ஏ. குமார், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ற்றி.சைலஸ் அருள்ராஜ், மாவட்டச் செயலாளர் எஸ்.சந்துரு ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஜே.சுபிக்ஷா நன்றி கூறினார். முகாமின் நிறைவில் 21 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டக் குழு தலைவ ராக ஏ.ஜனனி, செயலாளராக எஸ்.சந்துரு தேர்வு செய்யப் ்பட்டனர். மேலும், துணைத் தலைவர்களாக எஸ்.முகமது ஆதில், வி.எஸ்.ரெனிஷா பிரணவ், வீரா, இணைச் செய லாளர்களாக எஸ்.ஆர்.அனு, எஸ்.ஜே.சுபிக்ஷா, மதன் செயற்குழு உறுப்பினர்களாக ராகேஷ், சுகுமார், நாகராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நெல்லையில் தேர்தல் பறக்கும்படை சோதனை   ரூ.14½ லட்சம் பணம்-பொருட்கள் பறிமுதல்

திருநெல்வேலி, மார்ச்19- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன       இதன் ஒரு பகுதியாக, பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் புதனன்று இரவு வரை மொத்தம் ரூ.14 லட்சத்து 35 ஆயிரத்து 103 ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபானங்கள் மற்றும் வேட்டி - சேலைகள் உள்ளிட்ட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் மாவட்டம் முழுவதும் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 129 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக ரூ.1,55,900 ரொக்கம் மற்றும் ரூ.483 மதிப்பிலான மது பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ராதாபுரம தொகுதியில் ரூ.90 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.3,144 மதிப்பிலான மதுபானங்கள் என மொத்தம் ரூ.93,144 பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை தொகுதியில் ரூ.26,117 மதிப்பிலான மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அதிகபட்சமாக நெல்லை சட்டமன்ற தொகுதியில் ரூ.7 லட்சத்து 24 ஆயிரத்து 444, ராதாபுரத்தில் ரூ.2,32,389, நாங்குநேரியில் 1,68,165, அம்பாசமுத்திரத்தில் ரூ.1,60,064, பாளையங்கோட் டையில் ரூ.1,50,039 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை ரொக்கப் பணமாக ரூ.7 லட்சத்து 91 ஆயிரத்து 600, மதுபானங்கள், போதைப் பொருட்கள் ரூ.76,203 மற்றும் இதர பொருட்கள் ரூ.5,67,300 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து புகார் அளிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.        இதுவரை ‘சி-விஜில்’ செயலி மூலம் 19 புகார்கள் பெறப்பட்டு, அதில் 18 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. 1 புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள் ளது. கட்டணமில்லா தொலைபேசி (1800 425 8373) மூலம் 3 புகார்கள் பெறப்பட்டு 2 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன.1950 உதவி எண் மூலம் பெறப்பட்ட ஒரு புகாரும் தீர்க்கப்பட்டுள்ளது. இதர புகார்கள் என பெறப்பட்ட ஒரு புகாரும் தீர்க்கப்பட்டுள்ளது, மாவட்ட தேர்தல் நிர்வாகம் மற்றும் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் , ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் பொருட்களை கொண்டு செல்வ தைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

நெல்லையில் மாயமான பள்ளி மாணவி சி.சி.டி.வி. உதவியால் 10 மணி நேரத்தில் மீட்பு

திருநெல்வேலி, மார்ச்19- நெல்லை ராமையன்பட்டி பகுதியை சேரந்த ஒருவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் மகள் உள்ளார். இவர் பாளையங்கோட்டை யில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரு கிறார். புதனன்று வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மதியம் வேலை முடிந்து மாணவியின் தாயார் வீட்டுக்கு வந்த போது அங்கு மகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பள்ளி க்கு சென்று விசாரித்தார். அங்கு மாணவி வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்த னர். அக்கம் பக்கத்தில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தரும்படி நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புதனன்று புகார் அளித்தார். மகள் எங்கு சென்றார் என தெரியாமல் காவல் நிலையத்தில் கதறி அழுதார். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் எஸ் பி பிரசன்னகுமார் உத்தர வின் பேரில் போலீசார் பல்வேறு கோணங்க ளில் தீவிர விசாரணை நடத்தினர். காவல் ஆய்வாளர் மாரியம்மாள் தலைமையிலான போலீசார் நெல்லை பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள சி.சி. டி.வி. காமிரா பதிவுகளை  தீவிர மாக ஆய்வு செய்தனர். அப்போது மாணவி நெல்லையில் இருந்து மதுரை செல்லும் ரெயிலில் ஏறுவது சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து ஆய்வாளர் மாரியம்மாள் ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். உஷா ரான ரெயில்வே போலீசார் ரெயில்களில் தீவிரமாக தேடினர். அப்போது விருத்தாச்சலம் ரெயில் நிலையத்தில் மாண வியை கண்டுபிடித்தனர். மாணவி விருத் தாச்சலத்தில் பாதுகாப்பாக இருப்பதை ரெயில்வே போலீசார் நெல்லை போலீ சாருக்கு உட னடியாக. தெரிவித்தனர். 10 மணி நேரமாக மகளை தேடி தவித்த தந்தையிடம் போலீசார் இந்த தகவலை தெரிவித்தனர். இதையடுத்து மாணவியை நெல்லைக்கு அழைத்து வர போலீசார் விருத்தாச்சலம் விரைந்துள்ளனர். துரிதமாக செயல்பட்டு மாணவியை மீட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

வீட்டிற்குள் புகுந்த முள்ளம்பன்றி வனத்துறையினர் மீட்டனர்

திருநெல்வேலி, மார்ச்19- நெல்லை டவுண் பருவத சிங்கராஜா தெருவில் நள்ளி ரவு முள்ளம்பன்றி ஒன்று ஓடி வந்துள்ளது. இதனை பார்த்த வர்கள் அதனை பிடிப்பதற்காக. துரத்தி சென்றபோது அங்குள்ள ஒருவ ரது வீட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்டது. இதனால் அந்த அறையை பூட்டி விட்டு வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் இளங்கோ உத்தரவின் படி, வனச் சரக அலுவலர் இலியாஸ் மீரான் அறிவுறுத்தலின்படி, வனவர் முகமது ஆசிப் அலி,வனகால்நடை ஆய்வாளர் அர்னால்டு வினோத் மற்றும் வன குழு வினர்நள்ளிரவு சென்று வீட் டுக்குள் பதுங்கி இருந்த முள்ளம்பன்றியை புது காப்பாக பிடித்தனர்.சுமார் 8 வயது மதிக்கத் தக்க முள்ளம்பன்றி பாதுகாப்புடன் கங்கைகொண்டான் மான் கள் சரணாலயத்திற்குள் கொண்டு விடப்பட்டது.

தென்காசி அருகே இடைகாலில் ரயிலில் அடிபட்டு பெண் பலி

தென்காசி, மார்ச்19- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் பகுதியில் ரயிலில் அடிபட்டு ஒரு பெண் பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல் துணை ஆய்வாளர்  மாரிமுத்து, ஆய்க்குடி துணை ஆய்வாளர்   சுப்ர மணியன் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பெண்ணின் உடலை மீட்டு கூராய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொ டர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசார ணையில் அந்த பெண் செங்கோட்டை பகுதியை சேர்ந்த  மாரியம்மாள் (48) என்பது தெரியவந்துள்ளது. அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

2 கிலோ கஞ்சா பறிமுதல்: தூத்துக்குடியில் இளைஞர் கைது

தூத்துக்குடி, மார்ச் 19- தூத்துக்குடியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த ரூ.2லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜானகி தலைமையிலான போலீசார், புதனன்று இரவு நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி மட்டக்கடை பஜார் பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியே அதிவேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் இருந்த பையில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த நபரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் தூத்துக்குடி கணேசபுரம் ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவரின் மகன் காட்சன் (30) என்பது  தெரியவந்தது. மேலும், இவர் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து இந்தக் கஞ்சாவை வாங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், காட்ச னைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்குக் கஞ்சா விநியோகம் செய்த மர்ம நபர்க ளைப் பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள் ளனர்.

கேரள மாட்டு வியாபாரிகளிடம் ரூ.2.80 லட்சம் பறிமுதல்

ஒட்டன்சத்திரம், மார்ச் 19- வேடசந்தூர் அருகே கேரளா மாட்டு வியாபாரிகள் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.2.80 லட்சத்தை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள தங்கம்மாபட்டி திண்டுக்கல் - திருச்சி நான்கு வழி சாலை யில் வேடசந்தூர் பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை  சோதனை செய்த போது, கேரள மாநிலம் எர்ணாகுளம் சேராநல்லூரைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகள் 3 பேர் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.2.82 லட்சத்தை  பறிமுதல் செய்து வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பழனியில் கஞ்சா விற்பனை:  4 இளைஞர்கள் கைது பழனி, மார்ச் 19-  பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயனின் உத்தரவின்படி, பழனி உட்கோட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன்படி, காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடு பட்ட போது, பழனி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள பாலாஜி கருத்தரித்தல் மையம் அருகில்  சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டி ருந்த 4 பேரை காவல்துறையினர் விசாரிக்க சென்ற போது, அவர்கள் நான்கு திசைகளிலும் தப்பி ஓடினர். உடனடியாக சார்பு ஆய்வாளர் விஜய் தலைமை யில் காவல்துறையினர் தப்பி ஓடிய 4 பேரை சுற்றி  வளைத்து பிடித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களி டம் சோதனை மேற்கொண்டதில், சுமார் 80 கிராம் கஞ்சா  பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர்.

பட்டினமருதூரில் அகழாய்வு பணிகள் விறுவிறுப்பு

தூத்துக்குடி, மார்ச் 19- தூத்துக்குடி அருகே பழங்கால தமிழர்களின் முக்கிய வணிக நகரமாகத் திகழ்ந்த பட்டினமருதூரில், தொல்லியல் அகழாய்வு பணிகள் முறைப்படி தொ டங்கியுள்ளன. இது தமிழக தொல்லியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பட்டினமருதூர் பகுதி பண்டைய தமிழர்களின் வணிக மையமாக இருந்த தற்கான பல்வேறு ஆதாரங்க ளைத் தொல்லியல் ஆர்வ லர் ராஜேஷ் செல்வரதி சேகரித்தார். இப்பகுதியில் செவ்வக வடிவக் கிணறுகள், முதுமக்கள் தாழிகள், பழமையான ஓடுகள், எழுத்து பொறிப்புகள், இரும்புக்கால பொருட்கள் மற்றும் கடல்வாழ் உயிரி னங்களின் புதைபடிமங்கள் கண்டறியப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், பட்டின மருதூரைத் தொல்லியல் களமாக அறிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் வைக்கப் பட்டன. இதனைத் தொ டர்ந்து, 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு பட்டினமருதூர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவைத் தொல்லியல் களமாக அறிவித்து, அக ழாய்வு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்தது. தொல்லியல் துறை இயக்குநர் அஜய்குமார் தலைமையில் மார்ச் 17 செவ்வாயன்று அகழாய்வு பணிகள் தொடங்கின. முதற் கட்டமாக, அறிவியல் ரீதி யாக 20 மீட்டர் அகலம் மற்றும் 20 மீட்டர் நீளம் கொண்ட குழிகள் தோண்டு வதற்கான அளவீட்டுப்  பணிகள் மேற்கொள்ளப் பட்டன. மேலும், அகழாய்வு பணிகளை ஒருங்கிணைக்க அந்தப் பகுதியிலேயே தொல்லியல் துறை அலு வலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன. இதுகுறித்து தொல்லி யல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி கூறுகையில், மேற்பரப்பில் கண்டெ டுக்கப்பட்ட ஆதாரங்க ளுக்கு, தற்போது தொடங் கப்பட்டுள்ள அகழாய்வு மூலம் கிடைக்கப்போகும் சான்றுகள் மேலும் வலு சேர்க்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிதகுதி பெற்ற மாணவி வீரசுபாஷினி வறுமை காரணமாக நிதியின்றி தவிப்பு

இராஜபாளையம்,  மார்ச் 19- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சின்னச்  சுரைக்காய் பட்டி தெரு வைச் சேர்ந்த கே.வீரசுபா ஷினி (14). இவர் ராஜபாளை யம் ஏகேடி தர்மராஜா பெண்  கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை  கனகவேல் ஒரு கை ஊன மற்ற நிலையில் சிலம்பம் கற்றுத் தரும் ஆசிரியராக இருந்தவர், தற்போது கால மாகிவிட்ட நிலையில் கூலி  வேலை செய்து இவரது தாயார் காப்பாற்றி வரு கிறார்.  கடந்த மாதம் திரு நெல்வேலி விக்கிரமசிங்க புரம் பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான டேக் வாண்டோ போட்டியில் வீர சுபாஷினி உள்பட 4 பேர் மே 22 ஆம் தேதி ஜம்மு காஷ்  மீர் மாநிலத்தில் தேசிய அள விலான போட்டிகளுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ள னர். வீரசுபாஷினியுடன் சேர்ந்து புஷ்பகலா, மகா லட்சுமி, ஏஞ்சல் வர்ஷினி ஆகிய மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில்  வீர சுபாஷினி ஜம்மு -காஷ்மீர் மாநிலம் சென்று பங்கேற்க எந்தவிதமான நிதியின்றி தவித்து வரு கிறார். இவருக்கு தமிழக அரசு நிதி உதவி செய்தால் சிறப்பாக விளையாடி பல்  வேறு சாதனைகளை செய் வார் என்று தாயார் மல்க தெரிவித்தார்.

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவியருக்கு அழைப்பு

தூத்துக்குடி, மார்ச் 19- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், கல்லூரி களில் பயிலும் மாணவ / மாணவியர்க ளுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி, தங்குமி டம் மற்றும் சத்தான உணவு வசதியுடன் விளையாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. 2026–2027 ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ/ மாண விகளுக்கான சேர்க்கைக்கு 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 01.07.2001 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவும், 01.07.2009 அன்று அல்லது அதற்கு  முன்னர் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று  கல்லூரிகளில் சேரும் மாணவ/மாணவி யர்கள் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர்க்கப்படுவர். விளையாட்டுத்தகுதி தேசிய, மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதுநிலை பட்டப்படிப்பு (Postgraduate) முதலாம் ஆண்டு படிப்பில் சேர்வதற்காக இள நிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலைப் படிப்பின் போது  சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர் களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ / மாண வியர்கள், சிறப்புநிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான  விண்ணப்பப் படிவத்தினை 13.03.2026 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முக வரியில் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசிநாள்: 26.03.2026 அன்று மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் தகவல்க ளுக்கு ஆடு கள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். போட்டிகள் நடைபெறும் இடம் தடகளம், பளுதூக்குதல், ஜுடோ, வாள்விளையாட்டு, கால்பந்து (ஆ), கையுந்துபந்து: ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை. கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து (பெ), கைபந்து : ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், சென்னை. ஹாக்கி, கபாடி: மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம், எழும்பூர். தகுதியுள்ள விளை யாட்டு வீரர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரி விக்கப்பட்டுள்ளது.