சென்னை,ஜன.20- வீரவலூர் கிராமத்தில் பொதுப் பாதையில் தலித் சடலத்தை கொண்டு செல்வதால் ஆத்திரமடைந்து, சம உரிமை கோரிய தலித் மக்கள் மீது சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தி யுள்ளதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமு வேல்ராஜ், கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் வீரவலூர் கிராம தலித் அருந்ததியர் மக்கள் தங்களது மயானத்திற்கு செல்வதற்கு பிரதான பொதுசாலையை பயன்படுத்த முடி யாது. மிகவும் குறுகலான ஒதுக்குப் புறமான பாதை வழியாகத் தான் செல்ல வேண்டும். இந்த சாதி ஆதிக்கத்தை எதிர்த்து தலித் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை தலையீடுகள் செய்த பிறகு தலித் தரப்பில் மரணமடைந்த நாட்டான் என்பவர் பிரேதம் கடந்த 12 ஆம் தேதி காவல்துறை பாது காப்புடன், முதல் முறையாக பொதுப் பாதையில் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி யன்று தலித் தரப்பில் அமுதா என்பவர் மரணமடைய அவரது சடலம் பொதுப் பாதையில் எடுத்துச் செல்லப்பட இருந்தது. இதனைத் தடுத்திட தலித் குடியிருப்பிற்குள் புகுந்து சாதிவெறி யர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தி யுள்ளனர். வீடுகள், இருசக்கர வாக னங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என லட்சக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள பொருட்கள் சாதி வெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டன. வன்கொடுமை தாக்குதல் நடை பெற்ற வீரவலூர் கிராமத்து தலித் மக்களை தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநில துணைப் பொதுச்செயலாளர் ப.செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், டி.கே.வெங்கடேசன், எஸ்.ராமதாஸ், ஒன்றியச் செயலாளர் பி.சுந்தர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.கே.வெங்கடேசன், வழக்கறிஞர்கள் ரஜினிகாந்த், சி.முருகன்,மற்றும் எல்.சிவக்குமார் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்க! பாதிக்கப்பட்ட மக்களோடு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பின்வரும் கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.மேலும் தொடர்ந்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வும், நீதி கிடைக்கவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என மக்களிடம் உறுதியளிக்கப்பட்டது. பெயர்ப்பட்டியலுடன் கொடுக்கப் பட்டுள்ள புகார் அடிப்படையில் வன் முறையில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். சேதப்படுத்தப்பட்ட அனைத்து சொத்துக் களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். தலித் மக்கள் தங்களது வயல்வெளி களுக்கு சென்றுவர உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தலித் மக்கள் மயான பாதையை பயன்படுத்தும் உரிமையை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும். தலித் மக்கள் சுதந்திரமாகவும், ஜனநாயக உரிமையுடனும் வாழ்ந்திட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு,தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர்களை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளனர்.