tamilnadu

img

சு.வெங்கடேசன் எம்.பி தலையீடு - வேளாண் பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு தீர்வு

கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக் கழக மானி யக்குழு வழங்கி வரும் டாக்டர் எஸ். ராதா கிருஷ்ணன் உயர் ஆய்வு  ஊக்கத் தொகை (Dr.S.Radha Krishnan UGC - post doctoral fellowship) பெறுவதில் பல நடை முறைச் சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக தமிழகத்தில் சமூக அறி வியல் (social science) பிரிவில் உயர் ஆய்வு ஊக்க தொகை பெற அவர்களுக்கு வழிகாட்டிகள் (guide) பெறுவது கடினமாக இருந்த காரணத்தால் பலரால் தங்களது விண்ணப்பத்தை கூட சமர்ப்பிக்க முடியாத நிலை காணப்பட்டது.  

தற்போது உள்ள விதி களின்படி இந்த ஊக்க தொகை விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க, மூன்று ஆராய்ச்சி மாணவர்களுக்கு அவர்கள் முன்பே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற விதி  உள்ளதால் தமிழகத்தில் பல பேரா சிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் வழிகாட்டியாக இருக்க முடியவில்லை. பல கல் லூரிகளில் பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தா லும் சிலருக்கு மட்டுமே ஆராய்ச்சி மாணவர்கள் கிடைப்பதும், நிர்வா கத்தின் சார்பில் பலருக்கு வழங்கப் படாத சூழலே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தற்போதைய விதிகளை தளர்த்தி பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் வழிகாட்டியாக செயல்பட வழி வகை செய்ய வேண்டும். என்ற கோரிக்கை தமிழக பெண் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் மது ரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனிடம் முறையிட்டனர்.  

அதன்பேரில் பெண் ஆராய்ச்சி யாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டும், அவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் பறிபோகா மல் தடுக்கும் பொருட்டு, பல்கலைக் கழக மானியக் குழுவிடம் மாணவி கள் சந்திக்கும் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க வேண்டி கடிதம் வாயிலாக சில மாதங்களுக்கு முன்பாக வெங்கடேசன் எம்.பி., தலையிட்டார். தற்போது இப்பிரச்சனையில் குறிப்பாக வேளாண் துறையில் சமூக அறிவியல் பாடப் பிரிவில் உயர்க் கல்வி ஊக்கத் தொகை  பிரச்சனையில் உரிய நட வடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் உயர்க்கல்வி கனவுகள் பாதுகாக்கப்படும் என்று பல் கலைக் கழக மானியக் குழுவின் செய லாளர் பேரா.ராஜீனிஷ் ஜெயன்,  சு.வெங்கடேசன் அவர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலை யீடு மற்றும் முயற்சி காரணமாக வேளாண் உயர்க்கல்வி பயிலும் மாணவிகளின் உயர்ஆய்வு கல்விக்கான கனவு மற்றும் ஊக்கத் செனகை பெறும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் காணப்பட்டுள்ளது.