நிரந்தர ஊனத்தை குறைத்து மதிப்பீடு செய்வதா? மதுரையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மதுரை, செப்.2- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் செவ்வாயன்று மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் போராட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் கே.ஆர். சக்கர வர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாற்றுத்திற னாளிகளுக்கு மாத உதவித் தொகை யை ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 என உயர்த்த வேண்டும். உத்தரவு நகல் பெற்றவர்களுக்கு உடனடி உதவி வழங்கிட வேண்டும். பதிவு செய்த அனைவருக்கும் மாத உதவி வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். பட்டா பெற் றோருக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத் தில் வீடு கட்டித் தர மாவட்ட நிர்வாகம் அரசு முன்வர வேண்டும். இணைப்புச் சக்கரம் பொருத்திய இருச்சக்கர வாக னங்களுக்கு லைசென்ஸ் வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக் கான புதிய சிறப்பு பள்ளி உடனடி யாக துவங்கிட நடவடிக்கை மேற்கொ ள்ள வேண்டும். மாநகராட்சி கடைகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு மாற்றுத்திற னாளி களுக்கு வழங்கிட கோரியும், மேலும், மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் ஊனத் தன்மையை குறைத்து மதிப்பிடுவது, நிரந்தர ஊனத்தை தற்காலிக ஊனமாகக் குறைத்து பதிவு செய்வது போன்ற செயல்களை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் என்.பாரதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், கே.அழகுசாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இணைச் செயலாளர் டி.குமரவேல் எம்.சி., மாவட்டச் செயலாளர் அ.பாலமுருகன், இணைச் செயலாளர்கள் வி.மாரி யப்பன், எஸ்.செல்லம்மாள், ஆர்.ஜெயா, கே.பரமசிவம், துணைச் செய லாளர்கள், உதவித் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் 44 பெண்கள் உள்ளிட்டு 120 பேர் பங்கேற்றனர். அண்ணா பேருந்து நிலையம் பனகல் சாலையில் நடைபெற்ற மறிய லில் ஈடுபட்டவர்களை காவல்துறை யினர் கைது செய்து காந்தி அருங்காட்சியகம் எதிரில் உள்ள சஷ்டி மண்டபத்தில் அடைத்தனர்.