tamilnadu

img

சிபிஎம் தென்காசி மாவட்டச் செயலாளராக உ.முத்துப்பாண்டியன் தேர்வு

தென்காசி,டிச.1- சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தென்காசி  மாவட்ட முதல் மாநாடு திங்களன்று துவங்கி யது.  மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, வேலுமயில், மாவட்ட  குழு உறுப்பினர் சத்யா ஆகி யோர் தலைமை தாங்கினார் . வரவேற்பு குழு தலைவர் ராமமூர்த்தி  வரவேற்று பேசினார் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். நடைபெற்ற வேலைகள் மற்றும் ஸ்தாபன அறிக்கைகளை மாவட்ட செயலாளர் உ.முத்துப்பாண்டியன் முன்வைத் தார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் வாழ்த்தி பேசினார். மாநாட்டில் 31 பேர் கொண்ட மாவட்டக்  குழு  தேர்ந்தெடுக்கப் பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி நிறைவுரையாற்றினார்.

கட்சியின் தாலுகா  செயலாளர் அசோக்ராஜ் நன்றி கூறினார். தென்காசி மாவட்டத்தில்  தேவையான உரம், விதை  போன்ற வேளாண் பொருட்கள் தட்டுப்பாடின்றி  கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் கிராமப்புற இணைப்பு சாலைகளை மேம் படுத்த வேண்டும், கரும்பு விவ சாயிகளுக்கு 2018 -19 ஆண்டுக் கான பாக்கி பணத்தை   தரணி சர்க்கரை ஆலையில் இருந்து மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்காசி மாவட்டத்தை மையப்படுத்தி துறைவாரியாக அனைத்து அரசு அலுவலகங்களை ஏற்படுத்த வேண் டும், கொரோனா காலத்திற்கு முன்பு இயங்கி வந்த அனைத்து ரயில்களையும்மீண்டும் இயக்க வேண்டும்உட்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில்  நிறைவேற்றப்பட்டன. தென்காசி மாவட்டச் செயலாளராக உ.முத்துப்பாண்டியன் தேர்வு செய்யப் பட்டார். அவருடன் மாவட்ட செயற்குழு உறுப் பினர்களாக தி.கணபதி, எம்.வேல்முருகன், பி.வேலுமயில், தங்கம்,வி.குணசீலன், பி.உச்சிமாகாளி,பி.அசோக்ராஜ்,அயூப்கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;