tamilnadu

img

மாற்றுத் திறனாளிக்கு இருசக்கர வாகனம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பி.ஆர்.நடராஜன் எம்பி வழங்கினார்

கோவை, ஜூன் 25-  நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள வாகனத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெள்ளியன்று வழங்கினார். கோவை கீரனத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இரண்டு கால்க ளும் செயலிழந்த மாற்றுத்திறனாளி. இவர் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர். நடராஜனிடம் மாற்றுத்திறனா ளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாக னத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனையேற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்திற்கான ரூ80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார்.  கொரோனா காலகட்டத்தை பயன் படுத்தி ஒன்றிய மோடி அரசு நாடாளு மன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டு காலம் நிறுத்திவைத்தது. இதனால் மாற்றுத் திறனாளி பெண் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பணி கள் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு  நிதியில் இருந்து செய்யப்பட வேண்டிய பணிகள் பலவும் முடங்கின.  இந்நிலையில், தற்போது மீண்டும் தொகுதி மேம்பாட்டு நிதியினை ஒதுக்கி யுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக சமூகநலத்துறையில் பி.ஆர்.நடராஜன் எம்பி நேரிடையாக தலையிட்டு மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு இருசக்கர வாகனத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தினார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பிரத்தியேகமாக வடிவ மைக்கப்பட்ட இருசக்கர வாகனம் வரவழைக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து வெள்ளி யன்று மாற்றுத் திறனாளி பெண் செல்வியிடம் அந்த வாகனத்தை பி.ஆர். நடராஜன் எம்பி வழங்கினார். கோவை  காந்திபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில துணைச் செயலாளர் கே.பி.பாபு, மாவட்டச் செயலாளர் புனிதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். முன்னதாக தனது கோரிக்கையை ஏற்று தொடர்ந்து அதற்கான நடவ டிக்கை எடுத்து வாகனத்தை பெற்றுக் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அனை வருக்கும் தனது நன்றியை தெரி வித்தார்.

;