tamilnadu

img

கண்ணீர் ததும்பிய இரண்டரை மணி நேரம்; அமைதியில் உறைந்த தோழர்கள்

கண்ணீர் ததும்பிய இரண்டரை மணி நேரம்  அமைதியில் உறைந்த தோழர்கள்

மயிலாடுதுறையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டில் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வழக்காடி நீதிப் பெற்றுத் தந்த வழக்கறிஞர்கள், சமூக இயக்கங்களின் தலைவர்களுக்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சி.

மயிலாடுதுறை, செப்.1- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5 ஆவது மாநில மாநாடு  ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்கள் மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடை பெற்றது. தியாகிகளுக்கு அஞ்சலி, அறிக்கை முன்மொழிவு, விவாதம், தொகுப்புரை ஆகிய நிகழ்வுகளுக்கு மத்தியில் தீண்டாமை கொடுமை யாலும், சாதி ஆணவ படுகொலைகளா லும் தன் இணையரை பறிகொடுத்த வர்கள், வன்கொடுமைகளால் பாதிக்கப் பட்டவர்கள், சாதி ஆதிக்க சக்தியின ரால் உறவுகளை இழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் கரம்பற்றி பாதுகாத்து துணை நின்ற  தோழர்கள், சமூக நீதி இயக்கங்களின் தலைவர்கள், நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள் - என மகத்தான சாதி ஒழிப்பு போராளிகளை பாராட்டும் நிகழ்ச்சி சிஐடியு துணைப் பொதுச் செயலாளர்  கே.திருச்செல்வன் தலை மையில் நடைபெற்றது. அனைவரையும் மாநாட்டின் அரங்க  மேடையில் அமரவைத்து  ஒவ்வொரு வரும் சந்தித்த அடக்குமுறைகளையும், இழப்புகளையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலையீட்டால் கிடைத்த நீதியையும், நிவாரணம் குறித்தும் அமைப்பின் நிர்வாகிகள் பி.சுகந்தி, செ. முத்துராணி, கே.முருகன் ஆகியோர் வாசித்த அறிமுக உரைகள் அனைவ ரின் கண்களிலும் கண்ணீரை  வரவ ழைத்தன. 226 வழக்குகள் கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டங் களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னெடுத்துள்ளது. குறிப் பாக  266 வழக்குகளை தீண்டாமை  ஒழிப்பு முன்னணி சந்தித்துள்ளது. இக்காலக்கட்டத்தில் நடந்த 25 சாதி  ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக களத்தில் இறங்கி நீதிக்காக போராடி யுள்ளது. 19 மலக்குழி மரணங்கள், 21  இடத்தில் மயானத்திற்காகவும்; தலித் பெண்கள், குழந்தைகள் மீதான வன் கொடுமைகள் நடந்த 33 சம்பவங்களில் - அதற்கெதிரான போராட்டத்தில் உறுதி யுடன் நீதிக்காக போராடி பாதிக்கப் பட்டவர்களுக்கு துணை நின்று தேற்றி யுள்ளது. கண் முன்னால் நின்ற போராளிகள் அவற்றில்  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் கிராமத்தில் சாதி ஆணவப் படுகொலைச் செய்யப்பட்ட அருந்ததியர் இளைஞர் அழகேந்திரன் தாயார் மாரியம்மாள், தஞ்சாவூரில் பாதாளச் சாக்கடையில் மரணமடைந்த ஜெயநாராயணமூர்த்தி இணையர் சுகன்யா, சாதிய படுகொலை செய்யப்பட்ட நெல்லை தோழர்.அசோக் தாயார் ஆவுடையம்மாள், கிருஷ்ணகிரி ஊத்தங்கரை சாதி  ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சுபாஷ் இணையர் அனுசுயா, வேலூர் காட்பாடி, புகையநல்லூரில் காவல் துறை அராஜகத்தால் உயிரிழந்த சரத்குமாரின் பெற்றோர் மகியம்மாள்-ராமன், மதுரை, உசிலம்பட்டி சாதிய ஆணவத்தால் படுகொலை செய்யப் பட்ட விமலாதேவி கணவர் திலிப் குமார், நெல்லை பணகுடி வடலிவிளை யில் சாதி மறுப்பு திருமணம் செய்த தால் வன்கொடுமைக்கு ஆளான அஜிதா - ஸ்டீபன்ராஜ், செங்கல்பட்டு செய்யூர் கானத்தூர் கிராமத்தில் இல வச உழைப்புக்கு மறுத்ததால் வீடு  தீக்கிரையாக்கப்பட்டு  தாக்குதலுக் குள்ளான சலவைத் தொழிலாளி நந்த குமார் - சுலோச்சனா, தென்காசி கடப்பா க்கத்தி  சாதியவாதிகளால் புனையப் பட்ட பொய் வழக்கால் பாதிக்கப்பட்ட மனோஜ் - மகேந்திரன், தென்காசி கே. வி.ஆலங்குளம் பகுதியில் “அண்ணா ச்சி” என்று சொன்னதால் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் பூபதியின் தாயார் மாரியம்மாள், தென்காசி தேன் கொத்தை பொதுச் சாலையில் மேளம், பட்டாசு பயன்படுத்த மறுத்ததால் சாதிய வாதிகளால் புனையப்பட்ட பொய் வழக் கால் பாதிக்கப்பட்ட செவ்வி, கிருஷ்ண கிரி மாவட்டத்தில் சாதிய படுகொலை  செய்யப்பட்ட சசிக்குமார் இணையர் சுகுணா உள்ளிட்ட 23 பேர்; மற்றும் ப.பா.மோகன், ஆர்.கிருஷ்ணன், உ.நிர்மலாராணி உள்ளிட்ட வழக்கறி ஞர்கள் மற்றும் சமூக நீதிஅமைப்பு களின் தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் பெ.சண்முகம், தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி அகில இந்திய தலைவர், கே. இராதா  கிருஷ்ணன் எம்.பி., உள்ளிட்ட தலைவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பாராட்டுரையாற்றினார்.  ‘இந்த மகத்தான வரலாறு  தொடரட்டும்’ ‘‘இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறை களுக்கு எதிராக போராடிய கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலர் பட்டிய லினத்தை சார்ந்தவர்கள் கிடையாது. எனினும், அவர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக தாங்கள் சார்ந்த சாதியையும் எதிர்த்து களத்தில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர். இந்த வரலாறு தமிழ் நாட்டில் தொடர வேண்டும். ஒடுக்கப் பட்ட மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை நேர்ந்தால் தேர்தல் அரசியல், வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்படாமல், அவர்களது சட்ட பூர்வ உரிமைகளை நிலைநாட்டுவதே நமது கடமை” என பெ.சண்முகம் கூறினார். “பஞ்சமி நிலம் மீட்புக்கு சட்டம், அர சாணை எதுவும் தடையில்லாத நிலை யில், ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாததே முக்கியமான தடையாக இருக்கிறது. பஞ்சமி நிலம் என்று தமிழ்நாடு அரசு இதுவரை கண்டறிந்து ள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத் தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வே ண்டும். வருங்காலங்களில் பஞ்சமி நில  மீட்பு இயக்கத்தை மாநில அளவில் பிரம் மாண்டமான நில மீட்பு இயக்கமாக நடத்துவோம்” எனவும் குறிப்பிட்டார்.  - ஜான்சன்