சென்னை ஐஐடியை ஆர்எஸ்எஸ் பிரச்சார மேடையாக மாற்றுவதா
மாணவர்கள் எதிர்ப்பு
சென்னை, செப். 20- சென்னை ஐஐடியை (IIT Madras) ஆர்.எஸ்.எஸ் பிரச்சார மேடையாக மாற்றும் நடவடிக்கை களுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். என்ஐஆர்எஃப் (NIRF) தரவரிசை யில் முதலிடம் பெற்ற சென்னை ஐஐடியில் திங்க் இந்தியா (Think India) அமைப்புடன் இணைந்து ‘விக்சித் பாரத் - வளர்ச்சியடையும் பாரதம்’ (Viksit Bharat) என்ற தலைப்பில் நடை பெறும் நிகழ்வுகள் குறித்து இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் உரையாற்றுபவர்களான ஸ்ரீதர் வேம்பு, ஜி.ஆர்.சுவாமிநாதன், குரு மூர்த்தி, சின்மயா அறக்கட்டளை (Chinmaya Trust) நிர்வாகிகள், ஆர்ய வைத்ய நிறு வனர்கள், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) தேசிய செயலாளர் ஆஷிஷ் ஆகியோர் அனைவரும் வகுப்புவாத கருத்துக்களையும் கொடிய இந்துத்துவ சிந்தனைகளையும் பரப்பும் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் (RSS) துணை அமைப்பு நிர்வாகிகள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி முன்னர் பசுவின் சிறுநீர் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்தாகும் என்று ஆதாரமற்ற கூற்றுகளை முன்வைத்து அறிவியலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் சி.மிருதுளா, மாநிலச் செயலாளர் தெள.சம்சீர் அகமது வெளியிட்ட அறிக்கையில், திங்க் இந்தியா அமைப்பு ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சங்பரிவார் சித்தாந்தத்தை பரப்பும் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பு என்று குற்றம்சாட்டியுள்ளனர். பெரியார், அம்பேத்கர் போன்ற முற்போக்கு தலைவர்களின் கருத்துக்களை விவாதிக்கும் வாசகர் வட்டங்களை தடை செய்யும் சென்னை ஐஐடி, ஆர்.எஸ்.எஸ்ஸின் நேரடி துணை அமைப்பின் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது முரண்பாடானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அறிவியல் கண்டுபிடிப்புகளையும் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கும் சென்னை ஐஐடியை ஆர்.எஸ்.எஸ் கொள்கை பரப்பு பிரச்சார தளமாக மாற்றும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாகவும், மதச்சார்பு கருத்துக்களை பரப்பும் நிகழ்வுகளை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக செயல்படும் காமகோடியை சென்னை ஐஐடி இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்காமல் இருப்பது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.