tamilnadu

img

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி மாவட்ட மாநாடு வேண்டுகோள்

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க  தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி மாவட்ட மாநாடு வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி, ஆக. 17-  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி மாநகர் மாவட்ட சாதி மறுப்பாளர் சங்கமம் 5 ஆவது மாவட்ட மாநாடு ஞாயிறன்று திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கனல்கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் சம்பத், மாதர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி ஆகியோர் தலைமை வகித்தனர். தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மணிமாறன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கன்வீனர் ரேணுகா வாசித்தார். வேலை அறிக்கையை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் ஜோன்ஸ் சமர்பித்தார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார். மாநில தலைவர் செல்லக்கண்ணு சிறப்புரையாற்றினார்.  தமிழ்நாட்டில் நடைபெறும் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டில் ஜாதியின் பெயரில் உள்ள தெருக்களின் பெயர்களை நீக்க, தமிழ்நாடு அரசு நீண்ட காலத்துக்கு முன்பே அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல தெருக்களின் பெயர்கள் சாதியின் பெயரை வெளிப்படையாக கொண்டுள்ளன. அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாவட்டத்தின் புதிய தலைவராக கோ.கனல் கண்ணன், செயலாளராக எஸ். ரேணுகா, பொருளாளராக எல்.ஜோன்ஸ் உள்பட 35 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் தர்மா நன்றி கூறினார்.