திருச்சி பொன்மலை தியாகிகளுக்கு அஞ்சலி
திருச்சிராப்பள்ளி, செப். 5- 79 ஆம் ஆண்டு பொன்மலை தியாகிகள் தினம் வெள்ளிக்கிழமை பொன்மலை சங்கத்திடலில் கடைப் பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில், டி.ஆர்.இ.யு பொன்மலை பணிமனை கோட்ட தலைவர் லெனின் தலைமையில் உதவி பொதுச்செயலாளர் சந்தானசெல்வம், உதவி கோட்டச் செயலாளர் சங்கர், கோட்ட உதவி தலைவர்கள் பது ருதீன், கார்த்திக் உள்ளிட்டோரும், டி.ஆர்.இ.யு. திருச்சி கோட்டம் ஓப்பன் லைன் கோட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் உதவி பொதுச் செய லாளர்கள் ராஜா, சரவணன், கோட்டச் செயலாளர் கரிகாலன், உதவி கோட்டச் செயலாளர் செந்தில் மற்றும் ஏனைய கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். டி.ஆர்.பி.யு உதவி பொதுச் செய லாளர் மகேந்திரன் தலைமையில் கோட்டத் தலைவர் மனோகரன், மத்திய சங்க உதவி தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொருளாளர் ஜோன்ஸ் தலை மையிலான நிர்வாகிகள், பெல் சிஐடியு சங்க செயலாளர் பரமசிவம் தலைமையில் எம்.ஜி. குமார், அருணன், ஏ.ஐ.பி.டி.பி.ஏ மாநில பொருளாளர் இளங்கோவன் தலை மையில் மாவட்ட செயலாளர் அஸ்லாம் பாஷா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பி.எஸ். என்.எல்.இ.யு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் சண்முகம், சுந்தர்ராஜ் மற்றும் தோழமை சங்கத்தினர் உள்பட பலர் பொன்மலை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர். இதில் பொன்மலை தியாகி தியாகராஜனின் பேரன் சுவாமிநாதன் தியாகிகள் ஸ்தூபிக்கு செவ்வணக்கம் செலுத்தினார். இதேபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டப் பொதுச் செயலாளர் சுரேஷ், சிபிஐ மாநகர் மாவட்டச் செயலாளர் சிவா, மாணவர் பெருமன்ற மாநில தலைவர் இப்ராஹீம், இளைஞர் பெருமன்ற மாநில துணைத் தலைவர் எ. செல்வக்குமார், பகுதிக் குழுச் செயலாளர்கள், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் உட்பட பலர் தியாகிகள் ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.