tamilnadu

img

கேரளத்தின் நாயகன் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு அஞ்சலி

கேரளத்தின் நாயகன் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு அஞ்சலி

மயிலாடுதுறை, ஜூலை 23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரு மான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் திங்களன்று (ஜூலை 21) காலமானார்.  இதையொட்டி தோழர் வி.எஸ்.-க்கு  அஞ்சலி செலுத்தும் வகையில், திருச்சி ராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடு துறை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங் களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி, இரங்கல் கூட்டம், மவுன ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு  சார்பில் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் தலைமையில் காவல் நிலையம் அருகிலிருந்து கருப்பு பட்டை அணிந்து அமைதி ஊர்வலமாக புறப்பட்டு, காந்திஜி சாலை வழியாக கிட்டப்பா அங் காடி வந்தடைந்தனர். அங்கு அமைக்கப் பட்டிருந்த தோழர் வி.எஸ்.அச்சு தானந்தன் உருவப்படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர். திருச்சிராப்பள்ளி  கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச்  செயலாளர் கோவி.வெற்றி செல்வம் தலைமையில்   அனைத்து கட்சியினர்  மவுன அஞ்சலி ஊர்வலம் தெப்பக்குளம்  தபால்நிலையம் அருகிலிருந்து துவங்கி மரக்கடையில் நிறைவடைந்தது. மரக்கடையில் நடந்த அஞ்சலி கூட்டத் தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மூத்த தோழர் கே.வி.எஸ்.இந்துராஜ், மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, திமுக மாநகரச் செயலாளர் மதிவாணன், சிபிஐ மாநகர் மாவட்டச் செயலாளர் சிவா, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தமி ழாதன், புல்லட் லாரன்ஸ், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்ல மண்டி சோமு, மனிதநேய மக்கள் கட்சி  மாவட்ட செயலாளர் முகமது ராஜா,  சிபிஐ(எம்எல்) மாவட்ட செயலாளர் ஞானதேசிகன், அகில இந்திய காங்கி ரஸ் செயலாளர் கிறிஸ்டோபர் திலக் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் திருச்சி புறநகர் மாவட்டக்  குழு சார்பில் திருச்சி வெண்மணி இல்லத் தில் அஞ்சலி நிகழ்ச்சி சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தெய்வநிதி தலை மையில் நடைபெற்றது. சங்கத்தின்  மாநிலப் பொருளாளர் அ.பழநிசாமி,  மாவட்டச் செயலாளர் ஜெ.சுப்பிர மணியன், மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் புகழஞ்சலி செலுத்தினர். பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் வீரவணக்கம், செவ்வஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சிபிஎம் ஒன்றியச்  செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை யில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகி சி.பக்கிரிசாமி, எம்.எம்.சுதாகர்,  காங்கிரஸ் நிர்வாகிகள் வழக்குரைஞர் ராமசாமி, ரவிக்குமார், திமுக தலைமைக் கழக பேச்சாளர் மணிமுத்து, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கு.பெஞ்சமின், ரெ.ஞானசூரியன், ஜீவா னந்தம், முருக.சரவணன், மோரிஸ் அண்ணாதுரை, சிஐடியு என்.கந்தசாமி, கிளைச் செயலாளர்கள் நம்பிவயல் மூக்கையன், சிவகாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  கும்பகோணம் கும்பகோணத்தில் அனைத்துக் கட்சி யின் சார்பில் இரங்கல் கூட்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்றது. தோழர் அச்சுதானந்தன் உருவப்படத்திற்கு அனைத்து கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகரச் செயலாளர் கே.செந்தில் குமார் தலைமை வகித்தார். திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பொறுப்பாள ரும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பின ருமான க.அன்பழகன், துணை மேயர்  திமுக நகரச் செயலாளர் சு.ப.தமிழழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டி யன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் டி.  ஆர்.லோகநாதன், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் முன்னாள் மண்டலச் செய லாளர் வழக்கறிஞர் சா.விவேகானந் தன், வி.சி.க கும்பகோணம் மாநகர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சா.கோ  ராஜ்குமார், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பி னர் சுந்தர்ராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், க. அருளரசன், கும்பகோணம் ஒன்றியச்  செயலாளர் என்.கணேசன் உள்ளிட் டோர் இரங்கல் உரையாற்றினர். திருவாரூர் சிபிஎம் குடவாசல் ஒன்றிய, நகரம் சார்பாக தோழரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து செவ் வணக்கம் - இரங்கல் கூட்டம் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடை பெற்றது. இரங்கல் கூட்டத்திற்கு குட வாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர்  தலைமை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் டி.லெனின் முன்னிலை வகித்தார். குடவாசல் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், திமுக, சிபிஐ, காங்கிரஸ், மதிமுக, விடு தலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட தோழ மைக் கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகி கள், வர்க்க வெகுஜன அரங்கத்தினர் உரையாற்றினர்.  மன்னார்குடி மன்னார்குடியில் நடந்த அஞ்சலி கூட்டத்திற்கு நகரச் செயலாளர் ஜி.தாயு மானவன் தலைமை வகித்தார். நகரக் குழு உறுப்பினர்கள் ஆர்.மகாதேவன், கே.பிச்சைக்கண்ணு, ஜி.முத்துக்கிருஷ் ணன், அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள்  மாநில நிர்வாகிகள் கே.அகோரம், வீ. கோவிந்தராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோட்டச் செயலாளர் சகா யம், கட்சியின் மூத்த தோழர் பி.சந்திரசே கரன், தலையாமங்கலம் ஏஎஸ்ஆர் சிவ சேகரன், தீக்கதிர் செய்தியாளர்கள்  அழ கேசன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் வேதாரண்யம் வடக்கு ஒன்றியம்  சார்பில் கே.சித்தார்தன், ஏ.வெற்றியழ கன், எஸ்.அம்பிகாபதி, எஸ்.முருகை யன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி னர். கரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தலைமையில், கரூர் பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற அஞ்சலி கூட்டத் தில் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ரத்தினவேலு பேசினார்.  கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் புகளூர் கட்சி அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத் திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித் தார். கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி. முருகேசன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எம்.சுப்பிரமணியன், எம்.ராஜேந்திரன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் அரவிந்த், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் காதர்பாட்சா, வேலு, புகளூர் நகராட்சி 22 வது வார்டு கவுன் சிலர் இந்துமதி, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் சுமதி, சத்யபாமா ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். கடவூர் ஒன்றியக்குழு சார்பில் பால விடுதி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்த அஞ்சலி கூட்டத்திற்கு கட்சியின் கடவூர் வட்டச் செயலாளர் பி.பழனிவேல் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி.வேல்முருகன், வட்டக் குழு உறுப்பினர்கள் ரவி கண்ணன், முத்துச்சாமி, கிளை செயலாளர் மணி முத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  வர்த்தக அணி கிழக்கு மாவட்ட  தலை வர் பொன்னர் மற்றும் கட்சி உறுப்பி னர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு இடங்களில் நடந்த அஞ்சலி-இரங்கல் கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்டக் குழு,  ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச்  செயலாளர்கள், வாலிபர், மாதர், மாண வர் சங்க, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பிற அரசியல் கட்சியினர் கலந்து  கொண்டனர்.

அமைச்சர் அன்பில் மகேஸ் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகமான வெண்மணி இல்லத்தில் கேரள மாநில முன்னாள் முதல்வர் மறைந்த வி.எஸ்.அச்சுதானந்தன் உருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்‌. இந்நிகழ்வில் திமுக மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் மோகன், சிபிஎம் மாநில கட்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் சுரேஷ், பாரதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.