ஒன்றிய, மாநில அரசுகளில் பழங்குடியினருக்கான காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் மலைவாழ் மக்கள் சங்க திருவண்ணாமலை மாநாடு வலியுறுத்தல்
திருவண்ணாமலை,செப். 22- ஒன்றிய,மாநில அரசுகளில் பழங்குடி யினருக்கான காலிப்பணியி டங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திரு வண்ணாமலை மாவட்ட 7-ஆவது மாநாடு வந்த வாசி-ஆரணி சாலையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் பி. பொன்னுசாமி கொடி யேற்றி வைத்தார், மாவட்டத் தலைவர் டி. மணிமாறன் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் அய்யனார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் வி. குப்பு சாமி வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகை யில்,“ மலைவாழ் சங்கத்தின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக வன உரிமைச் சட்டம் நிறை வேற்றப்பட்டது. தமிழ கத்தில் 31 ஆயிரம் மலை வாழ் குடும்பங்களுக்கு பட்டா கேட்டு நாம் மனு அளித்துள்ளோம். அதில் 9,62 ஏக்கர் மட்டுமே பட்டா வழங்கியுள்ளது. ஏராள மான மலைவாழ் மக்க ளுக்கு பட்டா வழங்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டினார். மாவட்டத் துணைச் செயலாளர் வேலை அறிக்கையும், பொருளாளர் சி.பாஸ்கர் வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனர். தவிச மாவட்டச் செயலாளர் ஏ. லட்சுமணன், தலைவர் டி.கே.வெங்கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் எஸ். ராமதாஸ் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச்செய லாளரும், பழங்குடியின ஆன்றோர் மன்ற உறுப்பின ருமான இரா. சரவணன் சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் சத்யா, மாவட்ட இணைச் செயலாளர் ரேணுகா, மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகன், பி. ராஜேந்திரன், சின்னய்யா, சிபிஎம் நிர்வாகிகள் அப்துல் காதர், பிரபாகரன், யாசர் அராபத், ரவிதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு நிறைவுரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி. பொன்னு சாமி, செயலாளராக ஏ. அய்யனார், பொருளாளராக முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் செய்யாறு கல்வி மாவட்டத்தில் பழங்குடி மாணவர்கள் கல்வி கற்க ஏகலைவா பள்ளி உருவாக்க வேண்டும், ஒன்றிய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஒன்றிய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி யாற்றும் பழங்குடி ஊழி யர்கள் மீது மெய் தன்மை விசாரணை என்ற பெயரில் சித்திரவதைக்கு உள்ளாக்கு வதை தடுத்து நிறுத்தி ஒரு குறிப்பிட்ட கால வரைக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும், செய்யாறு கல்வி மாவட்ட த்தில் பிஎஸ்சி நர்சிங் (செவி லியர்) கல்லூரி துவக்க வேண்டும், அனைத்து பழங்குடி மக்களுக்கும் வீட்டு மனை பட்டா தொகுப்பு வீடு 450 சதுர அடியும், ரூ. 10 லட்சமாக தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கலசப்பாக்கம் தொகுதியை பழங்குடியின தொகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்
மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், கலசப்பாக்கம் தொகுதியை பழங்குடியின தொகுதியாக அறிவிக்க வேண்டும், பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், இந்தியாவில் ஏகலைவா பள்ளிகள் குறைவாக உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. எனவே, செய்யாறு பகுதியில் ஏகலைவா பள்ளி உருவாக்க வேண்டும், பழங்குடி மக்கள் பட்டியலில் வேட்டைக்காரன், குருமன் உட்பிரிவு, குறவன் உட்பிரிவு ஆகியோர்களை பழங்குடியினர் பட்டியலில் தேர்தல் வாக்குறுதியின் படி இணைக்க வேண்டும், பழங்குடியின மக்களுக்கு சாதி மற்றும் இனச் சான்றுகளை ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.