tamilnadu

வனத்துறையினர் காவலில் பழங்குடியினத்தவர் கொலை! சிபிசிஐடி விசாரணைக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

வனத்துறையினர் காவலில்  பழங்குடியினத்தவர் கொலை! சிபிசிஐடி விசாரணைக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

சிபிசிஐடி விசாரணைக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

சென்னை, ஆக. 1 -  உடுமலைப்பேட்டை அருகே, விசார ணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடி யினத்தைச் சேர்ந்த முதியவர் வனத்துறை யினரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் குறித்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு: சிபிஎம் கண்டிக்கிறது திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே சின்னாறு கிராமத்தில், பழங்குடி யினத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை  விசாரணை என்ற பெயரில் வனத்துறையி னர் அழைத்துச் சென்று அடித்து வனச்சரக அலுவலகத்திலேயே அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வனத் துறையினரால் நிகழ்த்தப்பட்ட இந்த படு கொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மை யாக கண்டிக்கிறது. பொய் வழக்கில் சிறை பழங்குடி வகுப்பைச் சார்ந்த மாரிமுத்து  மற்றும் சிலருக்கும் விவசாய நிலம் தொடர் பாக வனத்துறையினருடன் முரண்பாடு இருந் துள்ளது. இதன் காரணமாக அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந் தார்.  இந்த வழக்கில், ஜூலை 29 அன்று உடு மலை நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று மாரிமுத்து விடுதலை செய்யப்பட்டார்.  சட்டவிரோதமாக கைது ஜூலை 30 அன்று தனது வழக்கறிஞரின் அழைப்பின் பேரில் மாரிமுத்து நீதிமன்ற நடைமுறைகளுக்காக உடுமலைக்கு வந்து விட்டு, அரசுப் பேருந்தில் தனது ஊர் திரும்பிய  போது, சின்னாறு வனச்சோதனை சாவடியில்  வனத்துறையினர் அவரை வலுக்கட்டாய மாக பேருந்திலிருந்து இறக்கி, உறவினர்கள் யாருக்கும் தகவல் அளிக்காமல் வனச்சரக அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, அடித்து சித்ரவதைக்கு உள்ளாக்கியதில் அவர்  உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.  நம்ப முடியவில்லை உடலில் பல இடங்களில் காயங்கள் இருந் துள்ளன. வனத்துறையினரால் நிகழ்த்தப் பட்ட இந்த படுகொலையை மூடி மறைப்ப தற்கு, சிறுத்தையின் பற்களை மாரிமுத்து கடத்தி வந்ததாகவும், விசாரணையின் போது  கழிவறையில் தற்கொலை செய்து கொண்டு உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித் துள்ளதானது நம்பத் தகுந்ததாக இல்லை.  சட்டத்திற்கு விரோதமான இத்தகைய கொடுஞ்செயலில் சீருடை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபடுவதை தடுத்து நிறுத்த தமிழ் நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரையும் தண்டித்திடுக! மாரிமுத்துவின் மரணத்திற்கு காரண மான வனச்சரகர் உள்ளிட்ட வனத்துறையினர் அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின்கீழ் வழக்கு பதிவு செய்து, உடனடியாக பணிநீக்கம் செய்வதுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீ டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை யும் வழங்கிட வேண்டும். மேலும், இவ்வழக்கை நேர்மையாகவும், சுதந்திரமாக வும் விசாரிக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில  செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ.சண்முகம் குறிப்பிட்டு உள்ளார்.