காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி பொன்மலையில் டிஆர்இயு ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக. 28- காலி பணியிடங்களை நிரப்ப ஆர்.ஆர்.பி-ல் இன்டெண்ட் போடும்போது, ஐடிடி / ஐஆர்டி-க்கு பதிவு செய்தவர்களை கணக்கில் கொண்டு, தேவையான ஆட்களை ஆர்ஆர் டி / ஆர்ஆர்சி மூலம் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த பின்பும், சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர்இயு சார்பில் வியாழனன்று பொன்மலை பணிமனையில் சிடபுள்யுஎம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு ஒர்க் ஷாப் கோட்டத் தலைவர் லெனின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி உதவி பொதுச்செயலாளர் சந்தான செல்வம், கோட்ட உதவி தலைவர்கள் சங்கர், ராஜசேகர் ஆகியோர் பேசினர். ஆர்பாட்டத்தில், டிஆர்இயு ஹிந்தி நிர்வாகிகள் தோழர். ராஜ்தீப், ரிங்கு, தாக்கா ஆகியோர் பேசினர். கோட்ட உதவி தலைவர் பதுரூதீன் நன்றி கூறினார்.