tamilnadu

img

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

தருமபுரி, செப்.24- பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு, புதனன்று மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தருமபுரி மாவட்ட அஞ்சல் அலுவலக வளாகத் தில், வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா புதனன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் மரக் கன்றுகளை நட்டு வைத்தனர். அப்போது ஆட்சியர் பேசுகையில், மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஒரு சிறப்பு நிகழ்வாகவே எடுத்துக்கொண்டு, ஒரு மரக்கன்று வைத்து வளர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்கள்  குடும்பங்களில் உள்ளவர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களை நினைவுகூறும் வகை யில் கட்டாயம் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்ப டுத்திக்கொள்ள வேண்டும். மரக்கன்றுகளை நடுவ தோடு மட்டுமல்லாமல் நட்ட மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் கா.இராஜாங்கம், அஞ்சல் கண்காணிப்பாளர் ராதா கிருஷ்ணன், துணை கண்காணிப்பாளர் ராகுல் ராவத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.