போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது
சென்னை, ஆக.24 - போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்கவும், பணியில் உள்ள, ஓய்வுபெற்ற தொழிலாளர் களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நடைபெறும் காத்திருப்பு போராட் டம் 8 ஆம் நாளாக திங்கட்கிழமை அன்றும் தொடர் கிறது. பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழி யர்களுக்கு 15 மாதம் நிலுவையில் உள்ள ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண அரசு உத்தரவாதம் அளிக்கும் வரை ‘தொடர் காத்திருப்பு போராட்டம்’ நடைபெறும். கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் போக்கு வரத்து ஊழியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அரசு முன்வரவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்திலும் இப்பிரச்சனைகளை முன் வைத்து தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்களை திராவிட முன்னேற்ற கழகம் ஆதரித்தது. போக்குவரத்துக் கழகங் களை சிறப்பாக நடத்தவும், தொழிலாளர் பிரச்ச னைகளுக்குத் தீர்வு காணவும் திராவிட முன்னேற்ற கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, க.பொன்முடி, எல்பிஎப் பேரவை பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சண்முகம் ஆகியோர் தலை மையில் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவின் ஆலோசனைகளை மாண்பு மிகு முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வழங்கினார். திமுகவே அளித்த ஆலோசனைகளை இந்த அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை. தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. போக்குவரத்துக் கழகங்கள் தமிழகத்தின் மிக முக்கிய சேவைத்துறை நிறுவனமாகும். 1.25 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்ற னர். தினமும் சுமார் 2 கோடி பேர் பேருந்து போக்கு வரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா வில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அள விற்கு குறைந்த கட்டணத்தில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் 24 மணி நேர பேருந்து சேவை செய்யப்பட்டுள்ளது. தமிழ கத்தின் இன்றைய பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து கழகங்களின் பங்கு மிக முக்கிய பாத்திரம் வகிக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதி இல்லை. இழப்பு ஏற்படும் என தெரிந்தே 10,000 வழித்தடங்களில் கிராமப்புற, மலைப்பகுதி மக்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளாக...
இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட கடந்த 20 ஆண்டுகளாக அரசு எவ்வித நிதியுதவியும் அளிக்கவில்லை. போக்குவரத்துக் கழகங்களில் 100 ரூபாய் வசூலானால், 13 ரூபாய் வங்கிகளில் பெற்ற கடனுக்கு வட்டியாக செலுத்தப்படுகிறது. பி.எப்., பணிக்கொடை போன்ற தொழிலாளர் களின் ஓய்வுகால சேமிப்பு பலன் ரூ.15,000 கோடியை போக்குவரத்து நிர்வாகங்கள் செலவு செய்துவிட்டன. இதன் காரணமாக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வின்போது ஓய்வுகால பலன் வழங்குவது இல்லை. பணியில் உள்ள தொழி லாளர்களும் பல பாதிப்புகளுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.
தோற்றுப் போன திட்டங்கள் வேண்டாம்
போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பிரச்ச னைகளுக்குத் தீர்வுகாண அரசு வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட் டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும் என 12 ஆண்டு களாக சிஐடியு கோரிக்கை வைத்து வருகிறது. மொத்த போக்குவரத்துக் கழகங்களின் மொத்த பற்றாக்குறையே வருடத்திற்கு ரூ. 6000 கோடி தான். இதில் வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி யாக போக்குவரத்துக் கழகங்களில் ரூ.1000 கோடிக்கு மேல் செலுத்தி வருகின்றன. இதை ஒழுங்குபடுத்துவதற்கு மாறாக, அரசு தனியார்மய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மற்ற மாநிலங் களில் அரசு போக்குவரத்து நிறுவனங்களை அழிவுக்கு கொண்டு வந்த தோற்றுப் போன திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த திமுக அரசு கடந்த ஓராண்டாக முயற்சித்து வருகிறது. எனவே, போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்கவும், பணியில் உள்ள, ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் அரசு முன்வர வேண்டும் என்பதே சிஐடியு அரசுக்கு வைக்கும் வேண்டுகோள். இந்த கோரிக்கைகளை முன்வைத்துதான், கடந்த 18.8.2025 ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு பிரச்ச னைகளுக்குத் தீர்வு காணும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும். போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாக்க வும், தொழிலாளர்களின் நலன்களைப் பாது காக்கவும் நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டு மென சிஐடியு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.