நிலைப்பாட்டை அரசு தெளிவுபடுத்தும் வரை போக்குவரத்து ஊழியர் போராட்டம் தொடரும்
சம்மேளன பொதுச்செயலாளர் கே. ஆறுமுக நயினார் தகவல்
சென்னை, ஆக. 21 - பணியிலுள்ள தொழிலாளர்களின் ஊதிய நிலுவை, ஓய்வுபெற்ற தொழி லாளர்களின் பணப்பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் 21 மையங்களில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வரு கின்றனர். போராட்டம் துவங்கிய அன்றே ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன் வழங்க 1137 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், ஓய்வுபெற்றோர் நல அமைப்புக்கள் வரவேற்றுள்ள அதே நேரத்தில் போராட்டத்தையும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார் கூறுகை யில், “ஓய்வுபெற்றோருக்கான நிலுவைத் தொகையை முழுமையாக எப்போது அரசு வழங்கும்? பணியில் உள்ள தொழி லாளர்களின் ஒப்பந்த நிலுவைத் தொகையை மற்றும் இதர நிலுவைத் தொகைகள் எப்போது வழங்கப்படும்? 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர் களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான அணுகுமுறை என்ன? என்பன போன்றவற்றில் அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தவில்லை. எனவே, தொழிற்சங்கத்தை அழைத்துப் பேசி கோரிக்கைகள் தொடர்பாக அரசு முடிவெடுக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்” என்று அறிவித்துள் ளார்.
தமிழகம் முழுவதும் ஆதரவு இயக்கத்திற்கு சிஐடியு அழைப்பு
சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தர ராசன், பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத் துள்ளனர். அதில், நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களை கைது செய்வது; போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது போன்ற செயல்களில் காவல்துறை தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன், நிர்வாகம் இதுவரை பேச்சு வார்த்தை நடத்த முன்வராததால், போராட்டம் நீடித்து வரும் நிலையில், போராடும் தொழிற் சங்க தலைவர்களை அழைத்துப் பேச தமிழ்நாடு அரசும், நிர்வாகமும் முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். போக்குவரத்து தொழி லாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சிஐடியு மாவட்டக்குழுக்கள் மாவட்டத்தில் உள்ள இணைக்கப்பட்ட சங்கங்களின் தொழிலாளர் களை வலுவாக திரட்டி ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தமிழக உழைப்பாளி மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளனர்.