tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

வாக்குச்சாவடி மேற்பார்வை அலுவலர்களுக்கு பயிற்சி

பாபநாசம், ஜூலை 8-  வாக்குச்சாவடி மேற்பார்வை அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட ஏதுவாக பயிற்சி நடைபெற்றது.  பாபநாசத்தில் நடந்த பயிற்சிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும், உதவி வாக்காளர் பதிவு அலுவலருமான ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேலு, தேர்தல் துணை வட்டாட்சியர் தமயந்தி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், வாக்குசாவடி மேற்பார்வை அலுவலர்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பைக் திருட்டு

குழித்துறை, ஜூலை 8- குமரி மாவட்டம், மார்த்தாண்டம் பம்மம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (50 ). இவர் சம்பவத்தன்று  தனது வீட்டின் முன்பு தனக்குச் சொந்தமான பைக்கை  நிறுத்திவிட்டு, தூங்கச்சென்றார்.  காலையில் எழுந்து பார்த்தபோது பைக் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.