tamilnadu

img

செருப்பு மகாத்மியம்! - மூர்த்தி சுந்தர்

ஊர் ஊராய்ப்
பறந்து
உணவற்று
உறக்கமற்று
செருப்பு தேய
பணமுதலைகளுக்காய்
உழைத்து
ஓடாய்ப் போன
ஒரு செருப்பின்பெருமையை
இன்னொரு செருப்பை தூக்கிக் காட்டி 
பெருமைப்படுத்தலாம்.

இன்னும் 
கக்கத்தில்
கையில் தூக்கி
கடக்க முடியாத
வீதிகள்
இருக்கையில்
வெண்சாமரம்
செருப்பு சாமரமாக
ராஜ்ஜியத்தில் இருக்கட்டும்.

கொடுங்கோலர்களுக்கு எதிராக
செருப்பொன்று
உயருவது
அறத்தின் மாபெரும்
செங்கோல்.

செருப்பென்பது
சர்வரோக
சர்வதேச வலி நிவாரணி.

;