tamilnadu

மூணாறு அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து திருப்பூரைச் சேர்ந்த 24 பேர் படுகாயம்

மூணாறு அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து திருப்பூரைச் சேர்ந்த 24 பேர் படுகாயம்

அடிமாலி, அக்.19-  கேரளத்தில் மூணாறு, மாங்குளம் அருகே விரிபாரா என்கிற இடத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளானது.இதில் குழந்தைகள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.  தமிழ்நாட்டின் திருப்பூர், பெருமாள் நகர், அம்மன் டெக்ஸ் பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் தீபாவளியைக் கொண்டாட சுற்றுலா வாகனத்தில் மூணாறுக்கு வந்தனர். மூணாறு சென்றுவிட்டு மாங்குளம் செல்லும் வழியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, விபத்து நிகழ்ந்தது.  இந்த விபத்தில் சக்தி (33), ஷாலினி (8), வேதஸ்ரீ (4), முத்துகிருஷ்ணன் (57), சந்திரசேகர் (40), சஸ்டின் (2), கோகிலா (29), ஜீவிதா (35), கீதா (27), சரண்யா (28), ஜோதிமணி (54), விமல் (35), சித்ரா (38), ஜகதிமா (48),  ஜகதி (48), பிரதீஷா (8), அக்சா (5), சுரேஷ் (30), வேலுச்சாமி (60), கலாமணி (56), ஆராதனா (8), ஆறுமுகன் (9), மணிகண்டன் (31) ஆகியோர் காயமடைந்தனர்.இவர்களுக்கு முதலில் அடிமாலி தாலுகா மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக தேனி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.