சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்
கோவை, ஜூலை 26- கோவை எல் & டி பைபாஸ் சாலையில் உள்ள மதுக்கரை சுங்கச்சாவடியில் பணிபுரி யும் ஒப்பந்த ஊழியர்கள், தங்களுக்குச் சேர வேண்டிய வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட தொகை களை வழங்கக் கோரி வெள்ளியன்று, பணி யைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை எல் & டி பைபாஸ் சாலையில் உள்ள மதுக்கரை சுங்கச்சாவடியைத் தவிர மற்ற ஐந்து சுங்கச்சாவடிகளும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் மூடப்பட உள்ளன. இந்தச் சூழலில், மதுக்கரை சுங்கச்சாவடி யில் பணிபுரியும் 27 ஊழியர்களுக்குச் சேர வேண்டிய பி.எஃப். மற்றும் பணிக்கொடை தொடர்பாக நிர்வாகம் எந்த முறையான அறிவிப்பும் கொடுக்காமல் அலைக்கழிப்ப தாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர். மற்ற ஐந்து சுங்கச்சாவடிகளிலும் ஒப் பந்ததாரர் ஊழியர்களுக்குச் சேர வேண் டிய தொகைகளை வழங்கிவிட்டதாகவும், ஆனால் மதுக்கரை சுங்கச்சாவடியில் மட்டும் எந்த ஒரு முறையான பதிலும் இல்லை என் றும் ஊழியர்கள் தெரிவித்தனர். சுங்கச்சாவடி பராமரிப்புப் பணிகள் நேரடியாக தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செல்ல உள்ள தால், தங்களைப் புறக்கணித்து பணப் பலன் களைப் பெற முடியாமல் செய்வதாக அவர் கள் வேதனை தெரிவித்தனர். எனவே, அரசு இதில் தலையிட்டுத் தங்களுக்குத் தீர்வு ஏற்ப டுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி மதுக் கரை சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோவை மாவட்ட தனியார் பாதுகாவலர் சங்கம் (சிஐடியு) பொதுச் செய லாளர் என். செல்வராஜ் மற்றும் எல்.ஜி. சிவக் குமார் ஆகியோருடன் தொழிலாளர்கள், நிர் வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில், ஊழியர்க ளுக்குச் சேர வேண்டிய வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை ஆகியவற்றை வழங்குவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதைத் தொடர்ந்து, ஊழியர்களின் போராட் டம் தற்காலிகமாக திரும்பப் பெற்றனர்.