தமுஎகச மாநில மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு
கும்பகோணம், செப். 23- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 16 ஆவது மாநில மாநாடு தஞ்சையில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. அதனை ஒட்டி 16 ஆவது மாநில மாநாட்டிற்கான வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம், கும்பகோணம், திருவிடைமருதூர் அம்மாசத்திரம், நாச்சியார்கோவில் உள்ளிட்ட கிளைகள் சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்றது. இதயராஜா தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் க. அசோக்குமார் வரவேற்புரை ஆற்றினார். கும்பகோணம் மாநகர துணை மேயர் சுப. தமிழழகன், தமுஎகச தஞ்சை மாவட்டச் செயலாளர் சத்யநாதன், மாநிலக் குழு உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.பொன்விழா ஆண்டில் தமுஎகச என்ற தலைப்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன், “வெறுப்பின் கொற்றம் வீழ்க அன்பே அறமென எழுக’’ என்ற தலைப்பில் மேனாள் மாநிலத் தலைவர் பேராசிரியர் அருணன் ஆகியோர் பேசினர். மாநில மாநாட்டிற்கான கும்பகோணம் பகுதி வரவேற்புக் குழு தலைவராக சு.ப தமிழழகன், செயலாளராக கா. அசோக்குமார், பொருளாளராக வெங்கடாசலபதி உள்ளிட்ட 72 பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.