வாலிபர் சங்க மாநில மாநாட்டிற்கு திருப்பூர் தியாகிகளின் நினைவுச்சுடர்
திருப்பூர், அக்.10- திருப்பூர் தியாகிகள் சீராணம்பாளையம் பழனிச்சாமி, இடுவாய் ரத்தினசாமி, ஆஷர் மில் பழனிச்சாமி, கேத்தம்பாளையம் பன்னீர்செல்வம் ஆகியோரது நினைவிடங்களில் வெள்ளியன்று வாலிபர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தி, தியாகிகள் நினைவுச்சுடர் எடுத்துக் கொடுக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அக்.12 முதல் 14 வரை நடைபெறுகிறது. இதை யொட்டி திருப்பூர் தியாகிகளின் நினைவுச்சுடர் மாநில மாநாட்டு திடலுக்கு கொண்டு செல்லப்படு கிறது. அதன்படி, வெள்ளியன்று சீராணம்பாளையத்தில் தியாகி பழனிச்சாமி நினைவிடத்தில் திருப் பூர் தியாகிகளின் நினைவுச்சுடரை வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன் எடுத்துக்கொடுக்க, மத்தியக்குழு உறுப்பினர் செ.மணிகண்டன் பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்ட கே.ரத்தினசாமி, சாதிய, மதவாத சக்திகளுக்கு எதி ராக உழைக்கும் மக்களுக்கு ஆதர வாகச் செயல்பட்டதற்காக சாதி ஆதிக்க வெறியர்களால் கோரமான முறையில் படுகொலை செய்யப் பட்டார். இடுவாய் கிராமத்தில் தியாகி ரத்தினசாமி நினைவிடத்தில் நினைவுச்சுடர் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த சுடரை தமுஎகச மாநிலத் தலை வர் மதுக்கூர் ராமலிங்கம் எடுத்து கொடுத்தார். இதையடுத்து ஆஷர் மில் பழனிச்சாமி, கேத்தம்பாளை யம் பன்னீர்செல்வம் ஆகியோரது நினைவிடத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுச் சுடர் எடுத்துச் செல்லப்பட்டது. சீராணம்பாளையம், இடுவாய் நினைவுச் சுடர் வழங்கும் நிகழ்வில், இடுவாய் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.கணேசன், வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.அருள், மாவட்டத் தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் கே.பாலமுரளி, மாவட்டப் பொருளாளர் க.சிந்தன், நிர்வாகிகள் பிரவீன் குமார், முரு கேஷ், மெளனீஷ், விக்னேஷ், பிர வீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
