துள்ளு மீனு
துள்ளு மீனு துள்ளு மீனு துள்ளி நீந்தி வருகுது! கெண்டை மீனு, கெளுத்தி மீனு கிட்டச் சேர்ந்து ஆடுது! அயிர மீனு வயலுக் குள்ள அள்ள அள்ளப் பெருகுது ! ஆத்துக் குள்ளே ஆரா மீனு அலையைப் போலப் போகுது! குளத்து மீனு கொக்கப் பார்த்து கூனிக் குறுகி ஓடுது! கிணத்து மீனு பாம்பைப் பார்த்து கீழே ஒளிஞ்சி திரியுது! கடலு மீனு சுறா கிட்ட கலங்கி பயந்து நடுங்குது! எல்லா மீனும் எளியோர் வாழ்வில் ஏற்றம் அளிக்கப் போகுது! மீனுக் குழம்பு வாசம் வந்து மெல்ல வீதி மணக்குது! துள்ளு மீனு துள்ளு மீனு துள்ளி ஓடி வருகுது!