அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதியப்படும்
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் அரசு கல்லூரியில் ஆதிதிராவிட மாணவியர் விடுதி செயல் பட்டு வருகிறது. இந்த விடுதியில் ‘சமூக நல விடுதி’ என புதிய பெயர் பலகை மாற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. புதிய பெயர் பலகையை திறந்து வைத்த தூய்மை பணியா ளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுசாமி செய்தியாளர் களிடம் பேசுகையில், “மாநிலத்தின் சில இடங்களில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை இன்றும் நீடித்து வருகிறது. மலக்குழிகளை சுத்தம் செய்ய தூய்மை பணியா ளர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படும் என்பதை இதன் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு மாற்றாக ரோபோட்டிக் இயந்திரத்தை உருவாக்கி அதன் மூலமாக அந்த பணியை மேற்கொள்ள முடியுமா? என்று ஆலோசித்து வருகிறோம். மேலும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் “நலம் காக்கும் மருத்துவ திட்டம்” என்ற முழு உடல் பரிசோதனை திட்டம் விரை வில் துவங்கப்பட உள்ளது” என்றார்.
பாஜகவின் ஓரளவு வெற்றி பெரிய துரதிர்ஷ்டம்!: ப.சிதம்பரம் சாடல்
வேலூர்: வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில், குடியாத்தத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு நல உதவி கள் வழங்குதல் உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ப.சிதம்பரம், “தமிழகத்தில் பாஜக காலடி எடுத்து வைக்க சூழ்ச்சி செய்து, அதில் ஓரளவு வெற்றி யும் பெற்றுள்ளது பெரிய துரதிர்ஷ்டம். அதிமுக, பாஜகவோடு கைகோர்த்து அடுத்த தேர்தலை சந்திக்க உள்ளது. பாஜக என்றால் வடநாட்டு கட்சி, இந்தியை திணிக்கிற கட்சி, இந்து மதவெறியை திணிக்கிற கட்சி, குறிப்பாக தென்னக மக்களை, தமிழ்நாட்டு மக்களை வெறுக்கிற கட்சி என எல்லோருடைய மனதிலும் ஆழமாக பதிந்துவிட்டது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தால் அமைச்சர வையில் இடம் பெறுவோம் என அமித் ஷா கூறுகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக தனிப்பெரும்பான்மை யோடு ஆட்சி அமைக்கும் என்கிறார். அமித் ஷா கூட்டணி ஆட்சி என்கிறார். அதிமுக கூட்டணியை தோற்கடித்து விட்டால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்” என்றார்.
பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்
சென்னை: சுப முகூர்த்த தினத்தையொட்டி, ஜூலை 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் கள் வழங்கப்படவுள்ளன என பதிவுத்துறை அறிவித்து உள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான ஜூலை 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் அதிக அளவில் பத்திரப் பதிவு கள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் இந்த தேதிகளில் ஒரு சார்பதி வாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், இரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்க ளுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப் படும். அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங் களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன் களும், ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும்” என தெரி விக்கப்பட்டுள்ளது.
குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள மேட்டுக் குன்னத்தூர் கிராமத்தில் குட்டை யில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான துயரச் சம்பவம் நடந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த சர வணன் மகன் புவனேஸ்வரன் (7), கோபி என்பவரின் மகன்கள் மோனி பிரசாத் (9) மற்றும் சுஜன் (7) ஆகிய மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மூன்று சிறுவர்களும் அப்பகுதியில் உள்ள குட்டைக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். ஆழமான பகுதியில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி னர். தகவல் கிடைத்ததும், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று சிறுவர்களையும் மீட்டு பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று சிறுவர்களும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரி வித்தனர். இதையடுத்து மூவரின் உடல்களும் பிரேத பரிசோத னைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாணாவரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.