tamilnadu

img

கடும் துயரத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பண பலன்களை வழங்கிடுக!

சென்னை, ஜூன் 1-  அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள், மரணமடைந்த ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வுக் கால பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர் களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்  சம்மேளனம் (சிஐடியு) சார்பில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதம் வருமாறு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 31.5.2022 ஆம் தேதி 1075 தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்றுள் ளனர்.  பணி ஓய்வு பெற்ற இத்தொழிலா ளர்களுக்கு எவ்வித ஓய்வுகால பணப் பலன்களும் வழங்கப்படாமல் பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழக நிர்வாகங் கள் நிதி நெருக்கடியில் உள்ளதால் பணப்பலன்கள் வழங்க இயலவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.  31.5.2022ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என பல துறைகளைச்  சார்ந்த ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள் ளனர்.  தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது என அரசுத்தரப்பில் தொட ர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.  அதே போல், மின்சார வாரியமும் சுமார் ரூ.2 லட்சம் கோடி கடனில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணி ஓய்வுபெற்ற அரசு  ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் அனைவருக் கும் ஓய்வுகால பலன்கள் அளிக்கப் பட்டுள்ளது.  போக்குவரத்து ஊழி யர்கள் மட்டும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஏற்கனவே கடந்த மே 2020  முதல் மே 2022  வரை மரணமடைந்த, விருப்ப ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கால பலன்கள் சுமார் 600 கோடி  ரூபாய் நிலுவையில் உள்ளது.  இதனால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

போக்குவரத்துக்கழகத்தில் பணி புரியும் தொழிலாளி மரண மடைந்தாலோ, பணி ஓய்வு பெற்றாலோ  ஓய்வுக்கால பலன் உடனடியாக வழங்கப் படாத நிலை தொடர்ந்து நீடிப்பது எவ்விதத்திலும் நியாயமற்றது. போக்கு வரத்துக் கழக நிர்வாகங்கள் தொழி லாளர்களது வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை நிதியத்திற்கு அளிக்க வேண்டிய பணம் சுமார் ரூ.11 ஆயிரம்  கோடியை உரிய கணக்கில் செலுத்த வில்லை.  இப்போதும் மாதம் ரூ. 200  கோடி உரிய கணக்கில் செலுத்தப்படுவ தில்லை.  நிதி நெருக்கடியை சரிசெய்ய தொழிலாளர்கள் பணத்தை  பயன்படுத்துவது என்பது தவறான நடவடிக்கையாகும். அரசுத்துறை நிறுவனம் இது போன்ற செயலில் ஈடுபடுவது எவ்விதத் திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  கடந்த அதிமுக ஆட்சியில் நிலைமைகளை சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதே நிலை இப்போதும் இருப்பது வருத்தமளிக்கிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வுக்கால பலன்கள் வழங்காமல் இருப்பதுடன் கடந்த 5 ஆண்டு காலத்திற்கு மேலாக அகவிலைப்படி உயர்வும் மறுக்கப்பட்டு வருகிறது.  நீண்டகாலமாக ஒரே ஓய்வூதியத்தைப் பெற்று தொழிலாளர்கள் கடும் பாதிப்பு க்கு உள்ளாகி வருகின்றனர்.  போக்கு வரத்துக்கழகங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த மூத்த குடி மக்கள் வஞ்சிக்கப்படுவது அநீதி யானது.

எனவே தாங்கள் இதுவிசயத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பணிஓய்வு பெற்ற, மரணமடைந்த ஊழி யர்களின் பணப்பலன்களை வழங்கு வதுடன், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவையை வழங்க வும், அகவிலைப்படி உயர்வு, ஒப்பந்த பலன்களை வழங்கிடவும் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  இந்த கடிதத்தின் நகல், போக்கு வரத்துத்துறை அமைச்சர், போக்கு வரத்துத்துறை முதன்மைச் செயலா ளர் மற்றும் அனைத்து மேலாண்மை  இயக்குநர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.