இந்த கட்சி (கம்யூனிஸ்ட் கட்சி) தொழிலாளி வர்க்க கட்சி என்றாலும் அது அனைத்து உழைக்கும் மக்களுக்கான கட்சி. அனைத்து உழைக்கும் மக்களின் தலைவர். நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்துப் போராட முன்வரும் அனைத்துப் பிரிவினருக்கும் தலைமை தாங்கும் கட்சி. சுரண்டலிலிருந்து அனைத்து உழைக்கும் மக்களின் விடுதலையையும் சாத்தியமாக்க வேண்டும்; குறிப்பாக விவசாய வர்க்கத்தின் விடுதலையை சாத்தியமாக்காமல் தொழிலாளி வர்க்கம் தனது விடுதலையை சாத்தியமாக்க இயலாது.