டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை, அக். 2 - நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட காவிரி படுகைப் பகுதி களை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சியர்களுடன் நெல் கொள் முதல் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில், செப்டம்பர் 1 முதல் வரும் நிதியாண்டுக்கான நெல் கொள்முதல் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு விவகாரங் கள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆலோசனையின் போது கேட்டறிந்தார். மேலும், கொள்முதல் செய்யப் பட்ட நெல் மூட்டைகளை பாது காப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப் படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவ்வப்போது தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வருவதால், கொள்முதல் செய்யப் பட்ட நெல் மூட்டைகளை பாது காப்பாக கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவை குறித்தும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.