tamilnadu

img

தஞ்சாவூர், பெரம்பலூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

தஞ்சாவூர், பெரம்பலூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

தஞ்சாவூர், ஜூலை 19- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியக் குழு சார்பில் 4 ஆண்டுச் சந்தா, 6 அரையாண்டு சந்தாவை, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன் முன்னிலையில், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.அபிமன்னன், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் ஐ.வி.நாகராஜனிடம் வழங்கினார். திருவையாறு ஒன்றியக் குழு சார்பில், 8 ஆண்டு  சந்தாவுக்கான தொகையை ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா வழங்கினார். அம்மாபேட்டை ஒன்றியக் குழு  சார்பில் 4 ஆண்டுச் சந்தா, 3 அரையாண்டு சந்தாக் களுக்கான தொகையை, ஒன்றியச் செயலாளர் வி.ரவி, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன்,  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் முன்னிலையில், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப் பாளர் ஐ.வி.நாகராஜனிடம் வழங்கினார். நிகழ்வு களில் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.  பட்டுக்கோட்டையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடை பெற்று வருகிறது.  பட்டுக்கோட்டை நகரம், கரிக்காடு, சிவக்கொல்லை ஆகிய பகுதிகளில் ரெ. ஞானசூரியன், சாமிநாதன், தங்கவேல் நகர் கிளைச் செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண்டு சந்தா 5, அரையாண்டு சந்தா  4 என மொத்தம் 9 சந்தாக்கள் சேர்க்கப்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது. கும்பகோணம் பூதலூர், திருவையாறு, அம்மாபேட்டை, பாப நாசம், கும்பகோணம் ஆகிய ஒன்றியங்கள், கும்ப கோணம் நகரம், திருவிடைமருதூர் வடக்கு-தெற்கு ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினரும் தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளருமான ஐ.வி.நாகராஜன் தலை மையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் முதல் கட்ட மாக தீக்கதிர் நாளிதழுக்கு 55 சந்தாக்கள் சேகரித்து,  அதற்கான தொகையை கட்சியின் அந்தந்த ஒன்றிய பொறுப்பாளர்கள் வழங்கினர்.  சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளர் ஆர். மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பழனி வேல், ஒன்றிய - நகரச் செயலாளர்கள் ஏ.ராஜா,  ஏ.ரவி, டி.முருகேசன், மா.சங்கர், கே.செந்தில்குமார், என். கணேசன் உள்ளிட்டோர் சந்தாக்களை வழங்கினர்.'

பெரம்பலூர்,  ஜூலை 19 - பெரம்பலூர் மாவட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரு மான சாமி.நடராஜன் தலை மையில் வெள்ளிக்கிழமை தீக்கதிர் சந்தா சேர்ப்பு நடை பெற்றது. இதில் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் தீக்கதிர் நாளி தழுக்கு 17 ஆண்டு சந்தாவும்,  6 அரையாண்டு சந்தாவும் என மொத்தம் 23 சந்தா சேர்க்கப்பட்டது. நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ரமேஷ்,  மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ஏ.கே.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். திமுக மாவட்ட பொறுப் பாளர் ஜெகதீசன், ஒன்றியச் செயலாளர் நல்லதம்பி மற்றும் சிபிஐ ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ராஜீவ்  காந்தி, விசிக நிர்வாகி தமிழ்கனல், சமூக நீதி படைப்பாளர் சங்க மாநில  நிர்வாகி கவிஞர் தாஹிர்  பாட்சா, திமுக நெசவா ளர் அணி நிர்வாகி மணி வண்ணன் உள்ளிட்டோர் சாமி.நடராஜனிடம் தீக்கதிர் சந்தா வழங்கினர்.