மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழுவின் சார்பில் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு வருட சந்தா 86 , ஆறு மாத சந்தா 25, தினசரி சந்தா 33 என மொத்தம் 144 சந்தாவிற்கான 2 லட்சத்து 4 ஆயிரத்து 830 ரூபாய் தொகையினை கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரனிடம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ரவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.ராமகிருஷ்ணன், எஸ்.பாலா மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டிச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.