வறுமையை வென்று சாதித்த “அரியலூர் ஹாக்கி ஸ்டார்”
நம்ம பையன்’ என அறி விக்கப்பட்ட அந்த சில வினாடிகளில் ஒட்டுமொத்த மை தானமும் கரகோஷங்களால் அதிர்ந்தது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இந்தியா-பாகிஸ் தான் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தி செல்வம் அறி முகப்படுத்தப்பட்ட அந்த தருணம், ஒட்டுமொத்த இந்திய ஹாக்கி ரசிகர்களின் மனதில் நெருக்கமாக பதிந்து விட்டது. ஆனால் அந்த வெற்றிகரமான தருணத்தை அடை யும் வரையிலான கார்த்தியின் பயணம் எவ்வளவு சவாலானதாக இருந்தது என்பது பலருக்கு தெரி யாத கதை.
வறுமையில் முளைத்த கனவுகள்
செப்டம்பர் 1, 2001ஆம் ஆண்டு அரியலூர் நகரில் பிறந்த கார்த்தி செல்வம், வறுமையின் வலிகளை சிறுவயது முதலே அறிந்தவர். அப்பா செல்வம் அரசுக் கல்லூரி யில் காவலாளியாக வேலை பார்க்க, அம்மா வளர்மதி அக்கம் பக்கத்து வீடுகளில் பணிப்பெண் ணாக கஷ்டப்பட்டார். மூன்று குழந் தைகளில் இரண்டாவது குழந்தை யான கார்த்திக்கு ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாகவே இருந்தது. ஒவ்வொரு நாளும் உணவுக் காகவும் குடும்பம் கடினமான உழைப்பை வெளிப்படுத்த வேண்டி யிருந்த அந்த சூழலில்தான், சிறு வன் கார்த்திக்கு ஹாக்கி மீது மோகம் தொற்றிக் கொண்டது. வாழ்க்கையின் பல சவால்கள் இருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி விளையாட்டுதான் என்று அந்த சிறுவன் நம்பினான். சர்வ தேச அரங்குகளில் கொண்டாடப் படுவோம் என்ற பெரிய கனவுகள் எதுவும் அந்த நேரத்தில் இல்லை. வெறும் ஒரு நம்பிக்கைதான் இருந்தது. தனக்கு பிடித்த ஹாக்கி யில் வெற்றி பெற வேண்டும் என்ற அசைக்க முடியாத உறுதி.
கோவில்பட்டியில் தொடங்கிய பயணம்
தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் கீழ் செயல் படும் கோவில்பட்டியில் உள்ள “ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஃபார் எக்ஸலன்ஸில்” கார்த்தியின் ஹாக்கி பயணம் தொடங்கியது. இங்கே தான் அவனது சாதாரண திறமை அசாதாரணமான வேகத்து டன் வளர ஆரம்பித்தது. தேர்வர்க ளின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் ஒவ்வொரு நாளும் தன்னை முன்னேற்றிக் கொண்டார். ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் தொடரில் வெளிப்படுத்திய அபார மான ஆட்டம், 2018ஆம் ஆண்டில் 21 வயதுக்குட்பட்ட இந்திய தேசிய அணியில் இடம் பெறும் வாய்ப்பை அவருக்கு வழங்கியது.
சர்வதேசத்தில் கால் வைத்த தருணம்
கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி மூலம் நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்ட கார்த்தி, வரலாறு படைக்கும் தரு ணத்தை நெருங்கிக் கொண்டிருந் தார். கடந்த ஆண்டு மே மாதம் ஆசியக் கோப்பைக்கான இந்திய சீனியர் அணிக்கான அழைப்பு வந்த போது, கடந்த 13 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் இருந்து இந்திய தேசிய அணிக்குத் தேர்வான இரண்டா வது வீரர் என்ற பெருமையை கார்த்திக் செல்வம் தனதாக்கி னார். பாகிஸ்தான் அணிக்கு எதி ரான அந்த முதல் போட்டியில், 9 ஆவது நிமிடத்தில் கோல் அடித்த கார்த்தியை பார்த்து ரசிகர்கள் “யாருப்பா இது?” என்று கேட்ட போது, அந்த கேள்விக்கான பதில் அரியலூரில் இருந்து அவரது குடும் பத்திற்கு நன்றாகவே தெரிந்திருந் தது.
வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டெழுந்த கதை
நம்பிக்கை நட்சத்திரமாக உரு வெடுத்திருந்தாலும் கார்த்தியின் குடும்ப வாழ்க்கை இன்னும் போராட்டத்தில்தான் இருந்தது. கொரோனா ஊரடங்கு காலம் அவர் களுக்கு மிக கடினமான காலகட்ட மாக இருந்தது. ஹாக்கி வீரர் என்ற அடையாளத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு, கார்த்தி ஒரு பேக்கரி யில் பகுதி நேரமாக வேலை செய்தார். மாதம் ரூபாய் 5,000 சம்பாதித்து குடும்பத்தின் நெருக் கடியை போக்க உதவினார். இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியில், ஹாக்கி உலகில் வெற்றி பெறுவ தற்கான அவரது உறுதி ஒரு போதும் அசையவில்லை. வேலைக் குப் போகும்போது, மாலையில் வீட்டுக்கு வரும் போது அவன் மன தில் ஓடிக்கொண்டே இருந்தது ஹாக்கி ஸ்டிக்கும் பந்தும்தான். 2023இல் சென்னையில் நடந்த ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் ஆடிய பின்னர், இந்திய அணியிலிருந்து கார்த்தி திடீரென டிராப் செய்யப்பட்டார். இரண்டு வருடங்கள் கழித்து, தற்போது வரு மான வரித்துறையில் வேலை பார்த்து வரும் கார்த்திக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் கார்த்தியின் பெயர் இடம்பெற்றுள்ளது. “நான்கு மாதங்கள் சும்மா இருந்ததால் வெயிட் போட்டுட் டேன்” என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் கார்த்தி, கோச் (பயிற்சியாளர்) க்ரேக் ஃபுல்டனின் அறிவுரையைப் பின்பற்றி மறுபடி யும் பழைய வடிவத்துக்கு வந்திருக் கிறார். இந்தியா ‘ஏ’ டீம் சுற்றுப் பயணத்தில் நெதர்லாந்தில் சிறப்பாக விளையாடிய கார்த்தியை பார்த்து தான் மீண்டும் முதன்மை அணியில் இடம் கொடுத்திருக்கிறார்கள். இந்திய அணி பீல்ட் கோல் அடிப்பதில் தடுமாறி வருவதால், கார்த்தியைப் போன்ற ஸ்ட்ரைக்கர் களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப் பட்டது. “ஒரு அட்டாக்கிங் பிளேயரா பந்து என்கிட்ட இல்லன்னாலும் நான் எப்படி ஆடணுங்றத பத்தி இப்போ நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்” என்று உற்சாகமாகப் பேசுகிறார் கார்த்தி.
பெற்றோரின் எளிய ஆசைகள்
அப்பா-அம்மாவிடம் மீண்டும் அணியில் இடம்பெற்றதைச் சொன்னபோது அவர்களின் மகிழ்ச்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. “அவர்களுக்கு நான் ஆட வேண் டும், நல்லா ஆட வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும் - அவ்வளவு தான் ஆசை” என்கிறார் கார்த்தி. பெற்றோரின் இந்த எளிய எதிர் பார்ப்பு அவருக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்திருக்கிறது. வெறும் 23 வயதை மட்டுமே கடந்துள்ள கார்த்தி செல்வம், இந்திய அணிக்காக சென்னை மண்ணில் அவர் களமிறங்கியது அதுவே முதல்முறை. உலகத்தரம் வாய்ந்த ஜெர்மனி மற்றும் ஆஸ்தி ரேலியா அணிகளுக்கு எதிராக கோல்களைப் பதிவு செய்துள்ள முன்கள வீரரான இவர், நாளைய இந்திய ஹாக்கி அணியின் தவிர்க்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாகும். ஆர்வமும், உறுதியும், கடின உழைப்பும் இருந்தால், சவாலான சூழ்நிலைகளைக் கூட ஒருவர் கடக்க முடியும் என்பதை கார்த்தி செல்வத்தின் பயணம் உணர்த்து கிறது. அவர் இந்திய ஜெர்சியை அணிந்து கொண்டு களத்தில் இறங்கும் போது, தனது குடும்பம் மட்டுமல்லாது, தன்னைப் போன்ற பலரது நம்பிக்கையையும் மைதா னத்தில் சுமந்தவாறு விளையாடு கிறார். இவரது வெற்றி வறுமை என்றும் ஒருவரது திறமையை முடக்கிவிடாது என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் கார்த்தியின் பின்னணியை அறிந்து அவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து வீடு வழங்கியிருந்தார். கார்த்தி செல்வம் அரியலூரின் பெருமையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பெரு மையாகவும் விளங்குகிறார்.