tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மாடங்களில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணி

உதகை, செப்.26- இரண்டாவது சீசனை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மாடங்களில் 10 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங் களில் கோடை சீசன் நடைபெறும். அப் போது சமவெளி பகுதியில் கோடை வெயி லின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குளு மையான சீசனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் உதகைக்கு வந்து செல்கின்றனர். தொடர்ந்து 2 ஆவது  சீசன் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும். இதையொட்டி சுற்றுலாப் பய ணிகளை கவரும் வகையில் பூங்காக்களில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம். நடப்பாண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2  ஆவது சீசனுக்காக 55 வகையான மலர் நாற்றுகள் உற்பத்தி செய்து தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாவது சீசனை முன்னிட்டு உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்காக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதற் காக அலங்கார மேடைகளில் இன்கா மேரி கோல்ட், காஸ்மஸ், பேன்சி, பெட்டூனியா, ஜினியா, ஸ்வீட் லில்லியம், அஜிரேட்டம், காலண்டூலா, ஹெலிக்கிரேசம், சப்னேரியா போன்ற 55 வகைகளில் 10 ஆயிரம் மலர் தொட்டிகள் அடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல பூங்கா வின் பிற பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள சுமார் 5 லட்சம் மலர் செடிகளிலும் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. இதனிடையே மலர் தொட்டிகள் அடுக்கும் பணி ஓரிரு நாளில் நிறைவடையும். விரைவில் இரண் டாவது சீசனுக்கான மலர் கண்காட்சி சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க அனு மதிக்கபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, செப். 26 - காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னி ட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்  கூறியிருப்பதாவது: செப்டம்பர் 26 முதல் 30 வரை யிலான நாட்களில் சென்னையி லிருந்தும் மற்றும் பிற இடங்களி லிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. இதனால், சென்னை கிளாம்பாக் கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திரு நெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு வெள்ளிக்கிழமையன்று 790 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சனிக்கிழமை 565 பேருந்துகளும், திங்கட்கிழமை 190 பேருந்துகளும், செவ்வாய்க்கிழமை 885 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங் கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை 215 பேருந்துகளும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 185 பேருந்து களும் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங் களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சொந்த ஊர்களிலிருந்து சென்னை  மற்றும் பணியிடங்களுக்கு திரும்பு வதற்கு ஏதுவாக அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்து கள் இயக்கப்படும். தொலைதூரம் பயணம் மேற் கொள்ளும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.