அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாடு; தருமபுரியில் எழுச்சியுடன் துவங்கியது!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின்(சிஐடியு) 16-ஆவது மாநில மாநாடு, செவ்வாயன்று, தருமபுரியில் தோழர்கள் என். குட்டப்பன், எஸ். பக்தவத்சலு நினைவரங்கத்தில் (டிஎன்சி விஜய் மஹால்) துவங்கியது. சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை, சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் துவக்கி வைத்தார். சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே. ஆறுமுகநயினார், பொருளாளர் வி. சசிகுமார் உள்ளிட்ட தலைவர்கள், தமிழகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். (செய்தி : 3)