குண்டும் குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம், செப்.2- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 46ஆவது வார்டு, ஜோகிர் காலனி, ஆதிதிராவிடர் பள்ளி, அண்ணா குடியி ருப்பு ஓரிக்கை, சின்ன அய்யங்குளம், மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் அண்ணா குடியிருப்பு பிரதான சாலை வழியே பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில், பாதாள சாக்கடை பணிக்கு குழாய் பதிக்க, சில மாதத்திற்கு முன், சாலை தோண்டப்பட்டு பணி கள் நடந்தன. இதனால், சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதையடுத்து, சேதமான சாலை சீர மைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டது. இதனால், தற்போது சாலை படுமோசமாக மாறியுள்ளது. போக்கு வரத்திற்கே லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக சாலை உள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மழை பெய்யும் போது, சாலை நடுவே உள்ள பள்ளங் களில் மழைநீர் தேங்கி நிற்பதால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமான சாலைகளை சீரமைக்க, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.