69வது பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவரு மான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று கடந்த 9 மாதங்களாக மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார். அதில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், பிரச்சனைகள் ஏற்படும் இடங்களில் அவர் உடனடியாக களத்திற்கு சென்று உரிய ஆலோசனைகள் வழங்கி உடனுக்குடன் தீர்த்து வருகிறார். இது இந்தியா முழுவதும் பின்பற்ற வேண்டிய ஒரு முன்னுதாரணமாகும். கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் முதல்வ ராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை பாது காக்கவும்,தேவையான நிவாரணங் களை வழங்கியது மிகவும் பாராட்டுக்கு ரியது. அவர், தமிழக முதல்வராக பொறுப்பேற்று சிறந்த நிர்வாகத்தை அளித்து வருகிறார் என்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும். திமுக அடிப்படையில் தொண்டர் பொறுப்பி லிருந்து கட்சியியிலும், ஆட்சியிலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி அதன் மூலம் கிடைத்த அனுபவத்தின் வழியாக சிறந்த நிர்வாகத் திறன் பெற்று ஆட்சி நடத்தி வருவதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவையும், பாராட்டுக்களையும் அவர் பெற்றுள் ளார். அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளின் அணி வகுப்பில் அவர் முக்கியத் தலைவராக விளங்குகிறார். தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் செயலாற்றி வரும் அவருக்கு மீண்டும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.