வாக்குத்திருட்டு முறைகேடுகளால் அமைக்கப்பட்ட மக்களவைக்கு அதிகாரம் இல்லை! சென்னை சிந்தனையாளர் மன்றத்தில் எழுத்தாளர்கள் பேச்சு
சென்னை, செப்.28 - மக்களவைத் தேர்த லிலும் பல்வேறு சட்ட மன்ற தேர்தலிலும் வாக்கு த்திருட்டில் ஈடுபட்ட பாஜ கவைக் கண்டித்து எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் பதவி விலகி போராட வேண்டும் என்று அரசியல் பொருளாதார நிபு ணரும் எழுத்தாளருமான பர கலா பிரபாகர் கூறியுள்ளார். வாக்குத்திருட்டு அடிப் படையில் அமைந்த வாக்கா ளர் பட்டியலைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்தலின் முடிவில் அமைக்கப்பட்ட மக்களவைக்கு எந்த அதி காரமும் இல்லை என்றும் அவர் கூறினார். சென்னையில் சனிக் கிழமை நடைபெற்ற சிந்த னையாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த “ஜன நாயகத்தைப் பாது காப்போம் - வாக்குத் திருட்டைத் தடுத்து நிறுத்து வோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்த ரங்கில் பேசிய பரகலா பிர பாகர், எதிர்க்கட்சிகள் தங்கள் எம்.பி பதவிகளை ராஜினாமா செய்வது குறித்துத் தீவிரமாகப் பரி சீலிக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். நிராகரிக்க வேண்டும் “எதிர்க்கட்சிகள் வாக்கு த்திருட்டு பற்றிப் பேசும் போது ‘கேசினோ சிண்ட் ரோம்’ - அடுத்த தேர்தலில் நமக்கு வாய்ப்பு வரும் போது இவற்றை விசாரிக் கலாம் என்ற மனநிலையை நிராகரிக்க வேண்டும்,” என்றார் அவர். “உண்மையான வாக்கா ளர்களின் வாக்கைத் திருடு வது கேலிக்கூத்து. திருட்டுத்தனமான வாக்கா ளர் பட்டியலைக் கொண்டு நடைபெற்ற தேர்தல் முடிவு களைக் கொண்டு இந்த மக்களவை அமைக்கப்பட்டி ருந்தால் இந்த மக்கள வைக்கு சட்டப்பூர்வ அதி காரம் இல்லை,” என்று கடு மையாகக் கூறினார். ராஜினாமாவே தீர்வு அனைத்து எதிர்க்கட்சி களும் ராஜினாமா செய்து விட்டால் அரசாங்கத்திற்கு எல்லாம் எளிதாகிவிடும் என்ற கேள்விக்குப் பதில ளித்த பரகலா பிரபாகர், “அனைத்து எதிர்க்கட்சி களும் தேர்தலைப் புறக்க ணித்தால் அவர்களிடம் 400 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள். அப்படிப்பட்ட அவையில் எதிர்க்கட்சிகள் அமர்ந்துகொண்டு என்ன சாதிக்க முடியும்?” என்று கேட்டார். “ராஜினாமா செய்யா மல், நீங்கள் எதையும் தடுக்கிறீர்களா? அங்கேயே அமர்ந்திருப்பதன் மூலம் நீங்கள் அதை நியாயப் படுத்துகிறீர்கள்,” என்று எதிர்க்கட்சி மக்களவை உறு ப்பினர்களைக் குறை கூறினார். இந்து என்.ராம் இந்து பதிப்பகக் குழு மத்தின் இயக்குநரும் இந்துவின் முன்னாள் தலைமை ஆசிரியருமான என்.ராம் கூறுகையில், “சுதந்திர இந்தியாவின் வர லாற்றில் முதல்முறையாக குடியுரிமைக்கான அடை யாளமாக மதம் பயன்படுத் தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்,” என்றார். பாராட்டு “இந்தப் பிரச்சினையை மக்களிடம் எடுத்துச் சென்றதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நாம் பாராட்ட வேண்டும். இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது,” என்றும் என்.ராம் கூறினார். உறுதிமொழி இந்தக் கருத்தரங்கில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும் மக்களவை உறுப்பினருமான அ.ராசா பேசுகையில், “இந்தக் கருத்தரங்கில் பரகலா பிர பாகர் தெரிவித்த யோச னைகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்” என்று கூறினார். தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டத்தை மீண்டும் ஒருமுறை தமிழகத்திலி ருந்து எதிர்க்கட்சிகள் தொடங்குவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
