திருவனந்தபுரம், மார்ச் 12- அடுத்த நிதியாண்டில் 1,06,000 வீடுகளும், 2,950 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்படும் என்ற கேரள நிதி அமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பு, லட்சக்கணக்கான குடும்பங்களின் கனவுகளை நிறைவேற்றும். முதல் பினராயி அரசின் நவகேரள செயல் திட்டங்களின் நான்கு பணிகளில் லைப் முக்கியமானது. லைஃப் திட்டத்தின் மூலம் 2.76 லட்சம் வீடுகளை அந்த அரசு ஒப்படைத்தது. ஒவ்வொன்றும் அகலமான படுக்கையறை, வாழ்க்கை அறை, குளியலறையுடன் நன்கு அமைக்கப்பட்ட வீடுகளாகும். முதல் இரண்டு கட்டங்களுக்குப் பிறகு வந்த விண்ணப்பதாரர்களின் மனுக்கள் புதிய கட்டத்திற்கு பரிசீலிக்கப்படும். ஹட்கோ கடன் உள்ளிட்ட இனங்களில் 2022-23 இல் 1,06,000 வீடுகள் மற்றும் 2,950 குடி யிருப்பு வளாகங்கள் கட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது.
பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் (PMAY) ஒன்றிய அரசின் பங்கு 327 கோடி ரூபாய் உட்பட மொத்த செலவு 1871.82 கோடி ரூபாய் ஆகும். 2017ஆம் ஆண்டு ‘லைப்’ விரிவான வீட்டுவசதி பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக நிலமற்ற மற்றும் நிலமற்ற - வீடற்ற பயனாளிகளின் பட்டியல் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்டியல், பழங்குடியினர் நலன் பட்டியல் சாதியினருக்கான நிலம் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.1935.38 கோடி ஒதுக்கப்பட்டது. நிலம் இல்லாதவர்களுக்கு வீட்டு மனைக்கு ரூ.180 கோடி, வீட்டு வேலை மற்றும் படிப்பு அறையை கட்டி முடிக்க ரூ.205 கோடி, நலிந்த பிரிவினருக்கான மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.50 கோடி. ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் வரை உள்ள பட்டியல் சாதி குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.1,25,000/- வரை வழங்கப் படும். எஸ்.சி மாணவர்களுக்கான கல்வி உதவி, மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் விடுதி கட்டுதல், பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானம், இளைஞர்களுக்கான பயிற்சி, மனிதவள மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. ரூ.735.86 கோடி பழங்குடியினர் நலப் பணி களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட இது ரூ.57.28 கோடி அதிகம். எர்ணாகுளத்தில் உள்ள பழங்குடியினர் கலாச் சார மையம் கலை மற்றும் பயிற்சி மையமாக செயல்படும். இதில் தகவல் மற்றும் கல்வி பரி மாற்ற திட்டங்களுக்காக ரூ.2.2 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.