tamilnadu

img

இசைஞானியின் அழியாத பாரம்பரியம் கம்யூனிச மேடையிலிருந்து சிம்பொனி அரங்கம் வரை மண்ணிலிருந்து உதித்த மெலடிகள்

இசைஞானியின் அழியாத பாரம்பரியம் கம்யூனிச மேடையிலிருந்து சிம்பொனி அரங்கம் வரைமண்ணிலிருந்து உதித்த மெலடிகள் 

“பள்ளத்தூர் பண்ணை கள் சாம்பலாயின, வாடிய வயல்கள் நீராடின...” என்ற புரட்சிகரமான வரிகளுடன் பண்ணைப்புரத்து கிராமிய மேடைகளில் கம்யூனிச பாடல்கள் பாடியதில் இருந்து ஆரம்பமானது இசைஞானி இளை யராஜாவின் சங்கீத யாத்திரை. சகோதரர்கள் பாஸ்கரன், பாவலர் வரதராசனுடன் இணைந்து கிராமம் கிராமமாக சுற்றிப் பாடிய அந்த நாட்களிலேயே, மண்ணின் வேத னையும் விவசாயிகளின் வாழ்வும் இளையராஜாவின் மனதில் ஆழமான வேர்களைப் பதித்தன.  தேனி மாவட்டம், பண்ணை புரத்தில் 1943-இல் ஞானதேசிகனாக பிறந்த அந்தக் குழந்தை வறுமை யில் வளர்ந்தது. தாய் சின்னத்தாயி வீட்டு வேலைகளும் விவசாய வேலைகளும் செய்து குடும் பத்தைக் காப்பாற்றினார். ஏழு பிள்ளைகளைக் கொண்ட அந்தக்  குடும்பத்தில் வறுமை ஊஞ்சலா டிய நிலையில், பாவலர் வரதராசன் மூலம் கம்யூனிச சிந்தனைகள் ஊறின. அந்த வறுமையே சமூக நீதியின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தி, எளிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் மெலடிகளுக்கு அடித்தளமானது.  மதுரை கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆதரவு  இளையராஜாவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது மதுரை மாவட்டத்தின் கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆத ரவு. பி.ராமமூர்த்தி, என்.சங்க ரய்யா, பெண் விடுதலை இயக்கத் தின் முன்னோடி கே.பி.ஜானகி அம்மாள், ஐ.மாயாண்டி பாரதி ஆகியோர் இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களின் திறமை யை ஆரம்பத்தில் இருந்தே கண்ட றிந்தனர். கம்யூனிச கூட்டங்களி லும் விவசாயிகள் சங்கக் கூட்டங் களிலும் பாடும் வாய்ப்புகளை வழங்கி, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறனையும் அவர்களின் மனதைத் தொடும் இசையமைக்கும் கலைக்கு ஆதரவளித்து வளர்த்தனர். அன்னக்கிளியிலிருந்து உலகப் புகழ் வரை  25 வயதில் சென்னை வந்த  ஞானதேசிகன், 1976-இல்  ‘அன்னக்கிளி’ மூலம் இளைய ராஜாவாக மாறியபோது, கம்யூனிச மேடைகளின் அந்த இளைஞன் தமிழ் சினிமாவின் இசைப் புரட்சி யாளர் ஆனார். அன்னக்கிளிக்குப் பிறகு, 1977இல் வெளியான ‘பதி னாறு வயதினிலே’ படம் இளைய ராஜா இசையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது. கடந்த 1970களின் இறுதியில் தொடங்கி 1990களின் தொடக்கம் வரை தமிழ் சினிமாவின் பாடல் களில் ஏதேனும் பிரபலமான பாட லைப் போட்டுக் காட்டினால், யோசிக்காமல் பலரும் சொல்லும் பதில் ‘இளையராஜா’.   தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 8500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை யமைத்து தனிப்பெரும் ராஜாவாக வளர்ந்தார்.  சமூகத்தின் குரலாக ஒலித்த பாடல்கள்  இளையராஜாவின் பாடல்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டு மல்ல, சமூக வாழ்வின் அங்க மானவை. “உழைப்பாளி உன் பேரால் உலகம் இயங்குது, உயர்ந்த பதவி உன் கைகளால் உரு வாகுது”, “வேலைக்காரன் வேலை க்குப் போறான், விடிய விடிய உழை க்கிறான்”, “ஏழை மக்கள் எங்களடா, ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள்” என அவரது பாடல்கள் தொழிலாளர் வர்க்கத் தின் குரலாக ஒலித்தன. கிராமத்து வாழ்வின் நறுமணமும், எளிய வர்களின் கனவுகளும் அவரது இசையில் இணைந்து மக்களின் உணர்வுகளுக்கு குரல் கொடுத்தன.  உலகத்தரத்திற்கு பயணம்  1970களின் இறுதியில் தொடங்கிய இசைப் புரட்சி, 1980 களில் முழு வீச்சில் வெடித்தது. 1990களில் கிராம மெட்டுகளும், சிம்பொனி இசையும், இந்துஸ் தானி ராகங்களும், கர்நாடக சங்கீத மும், மேற்கத்திய ஹார்மனியும் ஒன்றிணைந்து ‘இளையராஜா இசை’ என்ற புதிய மொழியை உரு வாக்கின. இசை உலகில் பிதாமக னான இளையராஜா, தனது கனவு படைப்பான ‘வேலியண்ட்’ சிம்பொ னியை கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி லண்டன் மாநகரில் அரங்கேற்றி உலக சாதனை நிகழ்த்தினார்.  இந்தப் பின்னணியில்தான் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்ட பாராட்டு விழா நடை பெற்றுள்ளது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திரைப்பய ணத்தில் பொன்விழா கண்டிருக்கும் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழர்’ இளையராஜா அவர்களுக்கு இந்தி யாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தது, குறிப்பிடத்தக்கது. அழியாத பாரம்பரியம்  இன்றும் தமிழ்நாட்டில் ஒவ் வொரு கிராமத்திலும் உள்ள பேருந்துகளில் ஒலிக்கும் அவரது  பாடல்கள் தான் அவரது உண்மை யான சாதனை. அவை வெறும் திரைப்பாடல்கள் அல்ல, மக்க ளின் உணர்வுகளின் குரல்கள். பண்ணைப்புரத்து பாடல்கள் இன்று  லண்டனில் சிம்பொனியில் ஒலிக் கின்றன. கம்யூனிச மேடையில் பாடிய பாடகரின் குரல் இன்று உலகத்தின் காதுகளில் இனிக்கிறது. மதுரையின் கம்யூனிச தலை வர்கள் விதைத்த விதை இன்று உலகத்தரத்தில் பூத்துக் குலுங்கும் மாமரமாக வளர்ந்திருக்கிறது. உண்மையான கலை எப்போதும் மக்களின் மண்ணில் இருந்து தான் பிறக்கிறது என்றும், சிறந்த கலை ஞர்கள் எப்போதும் தங்கள் சமூ கத்தின் குரலாக ஒலிக்கிறார்கள் என் றும் இளையராஜாவின் இசை நமக்கு நினைவூட்டுகிறது. இதுவே என்றென்றைக்கும் தமிழர்கள் மனங்களில் மலர்ந்து கொண்டி ருக்கும் இசைஞானி இளைய ராஜாவின் அழியாத பாரம்பரியம்.