உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது
தூய்மைப் பணியாளர் போராட்டம்
சென்னை, ஆக. 13 - சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நியாயமற்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாய மற்றது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கை நிலுவையில் வைத்துவிட்டு, ஒரு தனிநபர் தொடுத்த பொதுநல வழக்கில் அவசர ஆணையிட்டு அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இது தூய்மைப் பணியாளர்கள் மீதான அக்கறையற்ற போக்கை வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தமிழ்நாடு அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேசி சுமூகமான தீர்வு காண முயற்சிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.