ஆளுநர் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறார்!
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றி யம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.42 லட்சத்தில் கட்டப்பட்டு உள்ள நியாய விலை கடையை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் திறந்து வைத்தார். இதில் முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராம லிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து உயர் கல்வித் துறை அமைச்சர் செய்தி யாளர்களைச் சந்தித்து பேசுகையில், “தமிழக முதல்வர் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒன்றிய அரசை மீறி தமிழக அரசு பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கு எட்டியிருக்கிறது. திருவிடைமருதூர் தொகுதியில் கலைஞரின் பல்கலைக்கழகம் கட்டுவதற்கான கோப்பு தமிழக ஆளுநரி டம் அனுப்பி வைக்கப்பட்டு, பல மாத காலம் ஆகியும், அது என்ன ஆனது என்று தெரியாத நிலை உள்ளது. ஆளுநர் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கிறார்” என்றார்.