tamilnadu

img

கூடங்குளம் 5 வது உலைக்கான கருவி இந்தியா வருகிறது

மாஸ்கோ, ஜூன் 24 - கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 5வது  அணு உலைக்கான வெப்ப-பரிமாற்ற கருவியை ஜியோ-போடோல்ஸ்க் ஜேஎஸ்சி (ரோசாட்டாம் ஸ்டேட் கார்ப்பரேஷன் -  ஆடம்எனர்கோமாஷ் ஜேஎஸ்சியின் இயந்திர  கட்டுமானப் பிரிவின் ஓர் அங்கம்) நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரிலீஃப் டேங்க்கை, இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஜேஎஸ்சி ஓகேபி ஜிட்ரோபிரஸ் நிறுவ னத்தின் வல்லுநர்கள், இதன் தொழில்நுட்ப வடிவத்தை உருவாக்கி உள்ளனர். ஜியோ-போடோல்ஸ்க் ஜேஎஸ்சியின் அணுசக்தி பொறியியல் உபகரணத் துறையின் பணியா ளர்கள், இதன் செயல்பாட்டு வடிவ ஆவ ணத்தை தயாரித்துள்ளனர். அதில், உப கரணத்திற்கான பராமரிப்பு ஆதரவையும் வழங்கி உள்ளனர்.

ரிலீஃப் டேங்க், அணுமின் நிலையத் திற்கான முக்கியமான உபகரணங்களில் ஒன்றாகும். இது, பிரைமரி சர்க்கியூட்டில் உள்ள பிரஷர் காம்பன்சேட்டர் மற்றும் பிற உப கரணங்களில் இருந்து வெளியிடப்படும் வெப்பம் மற்றும் அணு உலையின் பிற செயல்பாடுகளில் வெளியாகும் வெப்பத்தில் இருந்து வரும் நீராவியை திரவமாக மாற்றும்  பணியை செய்யக் கூடியது. இக்கருவி ஆஸ்டெனிடிக் குரோமியம் - நிக்கல் ஸ்டீலால்  செய்யப்பட்டது. இது, 15 டன் எடையும், 8  மீட்டர் நீளமும், 2.5 மீட்டர் விட்டமும், 4 மீட்டர்  உயரமும் கொண்டதாகும். இதன் ஆயுட்கா லம் 40 ஆண்டுகளாகும். 2003-2004 ஆம் ஆண்டில் ஜியோ-போடோ ல்ஸ்க் நிறுவனம் கூடங்குளம் அணுமின் நிலை யத்தின் 1 மற்றும் 2ம் மின் அலகுகளுக் கான டர்பைன் ஹால்ஸ் மற்றும் அணு உலைக் கான நீராவி ஜெனரேட்டர்கள் பிஜிவி-1000, ஈரப்பத பிரிப்பான் ரீஹீட்டர்கள் எஸ்பிபி-1000-1, உயர் அழுத்த ஹீட்டர்கள் பிவிடி மற்றும்  செயலற்ற வெப்ப நீக்க அமைப்பின் (பிஎச்ஆர்எஸ்) 24 வெப்ப பரிமாற்ற தொகுப்பு கள், பல்வேறு பணிகளுக்கான பைப் லைன்கள் மற்றும் வடிகட்டிகள் உள்ளிட்ட உபகரணங்களை தயாரித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு அணு மின் நிலையங்களில் விவிஇஆர் (நீர் குளிர்நிலை  மின் உலைகள்) உடன் கூடிய அணுமின்  நிலையங்களில், அணுஉலை கம்பார்ட்மென்ட் டில் உள்ள ரிலீஃப் டேங்குகளை தயாரிப்ப தில், ஜியோ-போடோல்ஸ்க் நிறுவனம் மிகுந்த  அனுபவம் பெற்றதாகும். சீனாவில் உள்ள டியான்வான் அணுமின் நிலையத்திலும், இந்தியாவில் கூடங்குளம் அணுமின் நிலை யத்தின் முதல்கட்ட மின் அலகிலும், ரோஸ்டவ்  மற்றும் லெனின்கிராட் அணுமின் நிலையங் களின் இரண்டாம் கட்ட மின் அலகுகளிலும், இந்நிறுவனத்தின் உபகரணங்கள் செயல்பட்டு வருகின்றன.